Tuesday, December 25, 2018
ஊருக்காகக் கொடுப்பவர்
செள - யென் - பேட் ( Chow Yun-fat ) ஹாங்காங் சினிமாவின் முன்னோடி நடிகர். ஆஸ்கார் விருது பெற்ற " Pirates of the Caribbean" " A better tomorrow" ஆகிய திரைப்படங்களின் மூலம் மேற்குலகில் எண்ணற்ற இரசிகர்களைப் பெற்றவர்.
Crouching Tiger, Hidden Dragon போன்ற திரைப்படங்களின் வழி பெரும் புகழ் சேர்த்தவர்.
இந்தச் செய்திகள் முக்கியமானவை அல்ல. ஆனால், இவர் அண்மையில் வெளியிட்ட அறிவிப்புத்தான் மிகவும் முக்கியமானது.
" எனது இறப்பிற்குப் பிறகு, எனது சொத்து முழுவதையும் நன்கொடையாகத் தருகிறேன்" என அறிவித்துள்ளார்.
இவரது சொத்து மதிப்பு ஏறக்குறைய 72 கோடி ரூபாய். உலகிலேயே மிக அதிகம் சம்பளம் வாங்கக் கூடிய நடிகராக இவர் திகழ்கிறார்.
" எனது சொத்துக்களை இறுதி வரை நான் சொந்தங் கொண்டாட முடியாது. நான் இறக்கும் பொழுது, இந்தப் பணத்தை மற்றவர்கள் பயன்படுத்துமாறு விட்டுச் செல்வதுதான் முறையானது " என்று கூறும் இவரது முடிவை, இவரது துணைவியாரும் உறுதியாக ஆதரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வளவு வசதி இருந்தும், எளிய வாழக்கையைத்தான் இவர் வாழ்கிறார். பிற இடங்களுக்குச் செல்ல, பொதுப் போக்குவரத்தைத்தான் பயன் படுத்துகிறார். அவர் நடித்த படங்களைப் பார்க்க வரிசையில் நின்று சீட்டு வாங்கிக் கொண்டுதான் செல்கிறார்.
எடுத்துக்காட்டான இவரது வாழ்வை, நமது நடிகர்களின் போலி வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
தனது சொந்தப் பள்ளிக்கட்டடத்திற்கு ஆண்டுக் கணக்கில் வாடகை கூடக் கொடுக்காமல், சிஸ்டத்தைச் சீர்திருத்தப் போகிறேன் என்பவர்களைப் பற்றி
என்னதான் சொல்ல முடியும்?
நன்றி: கண. குறிஞ்சி
Kathiravan Ravi Kumar
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment