Tuesday, December 25, 2018

பைசல் கான்

by.dr.Vavar F Habibullah






பைசல் கான்
தம்பி பைசல் கான் திருவனந்தபுரம்
நெய்யாற்றங்கரையில் அமைந்த
புகழ்பெற்ற நிம்ஸ் மெடிசிட்டி மருத்துவமனையின் மேனேஜிங்
டைரக்டர் ஆவார்.

சமீபத்தில்
அவரது மருத்துவமனையின்
சோலார் எனர்ஜி செயல்பாட்டுக்காக
ஐக்கிய நாடுகள் சபையின் பாராட்டு
தல்களை பெற்ற அவருக்கு சில
நாட்கள் முன்பு நமது இந்திய
ஜனாதிபதியிடம் இருந்து ஒரு
சிறப்பு அழைப்பிதழ் வந்தது.

மாலத்தீவு அதிபர் கலந்து கொள்ளும்
ராஷ்டிரபதி மாளிகை முக்கிய
விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள அவரை நமது ஜனாதிபதி அழைத்து இருந்தார்.சரியாக
முப்பது விருந்தினர் மட்டுமே கலந்து
கொண்ட அந்த நிகழ்ச்சியில் நமது
நாட்டின் பிரதமரும் கலந்து சிறப்பித்தார் என்பது மிகவும் இனிப்பான செய்தி.


எளிமையும்,அடக்கமும்,பணிவும்
நிறைந்த இந்த துடிப்பான இளைஞர்
ஆர்ப்பாட்டம் எதுவும் இன்றி அசாதாரணமான விசயங்களை
மிகவும் சாதாரணமாக நிகழ்த்தி
விட்டு மிகவும் சாதாரணமாக
அடக்கமாக காட்சி தருவது என்
போன்றவர்களை மிகவும் வியக்க
வைக்கிறது.
நெய்யாற்றங்கரையில் பிறந்து
வளர்ந்தாலும் கல்வி,மருத்துவம்
மற்றும் சமூக நல் அக்கறை
கொண்ட இளம் தலைமுறை
உலக நாயகனாக இவர் வலம்
வருவது மருத்துவர்களை மட்டுமின்றி
அறிவு சார் உலகையும் வியக்க
வைக்கிறது.
all my best wishes my dear
Faisal Khan

dr habibullah

No comments: