Sunday, February 11, 2018

காயிதேமில்லத் ஊடகக் கல்விக்கான சர்வதேச அகாடமி ( QIAMS )-யின் பொதுச்செயலாளர் எம்.ஜி. தாவூத் மியாகானுடன் ஒரு சந்திப்பு

சந்திப்பு : முதுவை ஹிதாயத்


சென்னையில் ஊடகக் கல்விக்காக ஒரு சர்வதேச அகாடமியானது கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அகாடமியை அவரது பேரன் எம்.ஜி. தாவூத் மியாகான் ஏற்படுத்தியுள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்த அகாடமியை பார்த்து மகிழும் வாய்ப்பு கிடைத்தது.
அப்போது அந்த அகாடமியின் பொதுச்செயலாளர் எம்.ஜி. தாவூத் மியாகானை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது.
ஊடகக் கல்விக்கான ஒரு சிறப்பு மிகு அகாடமியை ஏற்படுத்தியதற்காக அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்த சந்திப்பின் போது அவர் கூறியதாவது :

கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் முஹம்மது இஸ்மாயில் (1896-1972) இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய சிற்பிகளில் ஒருவர் ஆவார். நாடாளுமன்ற உறுப்பினராக நீண்டகாலம் பணியாற்றியுள்ளார். அவரது நினைவாக உருவாக்கப்பட்டதே காயிதேமில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை ஆகும். (QUEST).
அவரது பணிகளும், எளிமையும், தூய்மையான அரசியல் வாழ்வும் மக்களால் என்றும் போற்றப்படுவது. சிறுபான்மையினர் உள்ளிட்ட நலிந்த மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்திய பல்வேறு தேசிய நாளிதழ்கள் மற்றும் பருவ இதழ்களை காயிதேமில்லத் நிறுவினார்.
சென்னையின் மேடவாக்கத்தில் காயிதேமில்லத் கல்லூரியை கடந்த 42 வருடங்களாக காயிதேமில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை மிகச் சிறப்பாக நடத்தி வருகிறது.
இந்தக் கல்லூரியில் மிகத் தரமான கல்வியைக் கற்றுத் தேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பல்வேறு நிறுவனங்களில் சர்வதேச அளவில் உயர் பதவிகள் பெற்றுள்ளனர்.
காயிதேமில்லத் ஊடகக் கல்விக்கான சர்வதேச அகாடமி (கியாம்ஸ்) எனும் புதிய ஊடகக் கல்லூரியை தற்போது இந்த அறக்கட்டளை உருவாக்கியிருக்கிறது.
ஊடகத்துறையில் வெற்றிபெற விரும்பும் வகையில் சிறப்பான பயிற்சியினை பெற்று உயர்ந்த பதவிகளை அடைய உதவும் வகையில் இந்த ஊடக அகாடமி ஏற்படுத்தப்பட்டுள்ளஹ்டு.
பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், இணையதளங்கள் என பல்வேறு ஊடகங்களில் பணியாற்றுபவர்களும் கூட தற்போதைய புதிய சூழல்களுக்கு ஏற்ப தங்களின் திறமைகளை மேம்படுத்திக் கொள்வதற்கான சிறப்பு பயிற்சிகளை இந்த அகாடமி வழங்கி வருகிறது.
ஊடகத் துறையில் பல்வேறு வகையான தொழில்நுட்பங்களை கற்றுத் தேறியவர்களுக்கும், திறன்மிக்கவர்களுக்கும் நல்ல சம்பளம், நல்ல பதவி என்று ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.
இதற்காக இந்த அகாடமியில் ஒரு வருட கால பட்டயப் படிப்பு மற்றும் ஆறு மாத கால சான்றிதழ் படிப்பு உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சான்றிதழ் படிப்பில் ஐந்து பேர் தற்போது சிறப்பான பணிகளில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த அகாடமியின் நிர்வாகக் குழுவில் சென்னை எஸ்.ஐ.இ.டி. ஜேபிஎஸ். பெண்கள் கல்லூரியின் தலைவர் பதம்பூஷன் மூஸா ராஸா சாஹிப் ஐ.ஏ.எஸ். (ஓய்வு), மலேசியாவின் டத்தோ ஸ்ரீ முஹம்மது இக்பால், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் டாக்டர் வே. வசந்திதேவி, சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சாதிக், இலங்கை நவமணி நாளிதழ் முதன்மை ஆசிரியர் என்.எம். அமின், ஹைதராபாத் மெஸ்கோவின் தலைவர் டாக்டர் பக்ருதீன், திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் செயலாளர் மற்றும் தாளாளர் ஃபத்ஹுர் ரப்பானி மற்றும் நான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த அகாடமியில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தியேட்டர்கள், அரங்குகள் அமைந்துள்ளன. பிராக்டிகல்களில் அதிக கவனம் செலுத்தும் வகையில் பாடத்திட்டம் இருந்து வருகிறது.
திறமையான ஆசிரியர்கள் மற்ரும் ஊடகங்களில் சாதித்தவர்களால் சிறப்பான வகையில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
ஊடகத்துறையில் சிறந்த வகையில் செயல்பட்டு வரும் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இந்த படிப்பை படிப்பவர்களுக்கு நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், டிஜிடல் ஊடகங்கள் உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்பு பெற உதவி வருகிறது.
இந்த படிப்பில் சேர விரும்புபவர்கள்
டாக்டர் சி. அப்துல் சலாம் 99520 86761 மற்றும் ஹனீன் ஃபாத்திமா ;805 600 8739.
qiamschennaitn@gmail.com  ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.

Quaide Milleth International Academy of Media Studies
No 82 Sterling Road
Numgabakkam
Opp. Loyola College
Chennai – 600 034
enquiry@qiams.in
Muduvai Hidayath <muduvaihidayath@gmail.com>

No comments: