7 வயதிற்கு பிறகே கற்பதற்கான பக்குவம் வரும் நிலைமையில் ஏன் 3 வயதிலிருந்து பள்ளிக்கு அனுப்பும் கட்டாய நிலமை… இந்த வயதிலேயே சிந்தனையைத் தடுக்கவேண்டும் என்பதே இப்போதைய கல்வி முறையின் திட்டம்… 7 வயது வந்து சிந்தித்து உள்வாங்கும் முன்னே இங்கே வேலை கொடுக்கும் நிறுவனங்களுக்கு வேண்டிய அடிபணிதலை பயிற்றுவிக்கிறார்கள்..
குறைந்தது 20 வருடம் வருடம் படிக்கவேண்டும் ஒரு நல்ல வேலைக்கு போவதற்கு.. நன்றாக கவனிக்கவும் வேலைக்கு போவதற்கு, தொழில் தொடங்க அல்ல. சரி படித்தவுடன் சேர்ந்த வேலை படிப்புக்கு சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது.. இப்போது வேலையை பழகவேண்டும் / படிக்கவேண்டும்.. இங்கும் கற்பது இல்லை.. இவையெல்லாம் அடுத்த 30-35 வருடம் வேலை செயவதற்கு.. இந்த வேலைக்கான படிப்பு இளம் வயதில் இழந்தது எவ்வளவு என்று ஒவ்வொருவரும் சிந்தித்தால் தெரியும்.. இதை எழுதுகிறவர்ககு 40+ வயது, வாழ்க்கை தேடலுக்கு நேரம் கிடைத்தனால் இந்த பதிவு… நிறைய பேர்களுக்கு இந்த தேடலுக்கான நேரம் கிடைப்பதில்லை.. இல்லை மயக்கத்தில் இருக்கிறார்கள்..
வேலைக்காக படிக்கவேண்டுமா.. நமக்காக கற்கவேண்டுமா? நமக்காக கற்றல் என்பதே இல்லை.. இங்கு அனைத்தும் இயங்குவது தனக்காக அல்ல… நம் மேல் தினிக்கப்பட்ட வேலைச்சமூகம் என்ற உளவியல்… உலகம் முழுவதும் வணிகம் செய்த இனம்.. இப்போது கடல்கடந்து சேவை செய்யப்போகிறது…
ஏன் கற்பது காணாமல் போனது… அல்லது மறுக்கப்பட்டதா / மறைக்கப்பட்டதா… ஆங்கிலேயன் அடிமைச் சேவகத்திற்காக உருவாக்கிய கல்வி முறையே பின்பற்றுவது என்பது எதை குறிக்கிறது.
கல்வியில் உள்ள அந்நியம்:
படிக்கும் மொழி தாய் மொழி அல்ல
படிக்கும் வரலாறு தன் இனத்தின் வரலாறு அல்ல
தன் நிலத்தின் மண்ணியல் படிப்பதே இல்லை
தொழில் படிப்புகள் நிலம் சார்ந்ததாக இல்லை
நமது அறிவியலை படிப்பதே இல்லை
நமது விளையாட்டை விளையாடுவது இல்லை
நமது கலையை மதிப்பதே இல்லை
நமது மண்ணின் பண்பாடு படிப்பதில்லை
நமது மண்ணின் உணவைபற்றி படிப்பதில்லை
நமது மண்ணின் மருத்துவம் படிப்பதில்லை
நமது மண்ணின் வேளாண்மையை படிப்பதில்லை
நமது உடலைப்பற்றி கற்பது இல்லை
அப்புறம் எப்படி இந்த மண்ணில் வேலை கிடைக்கும்.. அல்லது தொழில் தொடங்க முடியும்… நிச்சயம் படித்த படிப்பிற்கு வேலைக்காக சொந்த நிலத்தைவிட்டு நகருதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது..
சரி படித்துவிட்டு நிலத்தை விட்டு பிரியாமல் நிலம் சார்ந்த தொழிலை ஒருவன் ஆரம்பித்தால் அவனை ஏளனமாக பார்பபது… இது நான் அடிமையாக இருக்கும்போது நீ மட்டும் எப்படி முதலாளியாக இருக்கலாம் என்ற உளவியல் வெளிப்பாடு..
இந்த படிப்பை விட்டுவிட்டு… நிலம் சார்ந்து கற்கும்போதுதான் தற்சார்பியலாக வாழ வழி வகுக்கும்..
மண்ணியலையும், மெய்யியலையும் கற்றால்தான் நமக்கு சுதந்திரம்… இல்லையேல் அடிமைதான் நீ எங்கிருந்தாலும்!!!
நமது முன்னோர்கள் இவ்வளவு படித்தார்களா என்றால் இல்லை, இன்னும் சொல்லப்போனால் எழுத படிக்ககூட தெரியாது.. ஆனால் அவர்கள் கற்றார்கள் அவர்களின் முன்னோர்களிடமிருந்து அதையே நமக்கு கற்றுக்கொடுத்தார்கள்… எவ்வளவு வளங்களை நமக்கு பாதுகாத்து கொடுத்துச்சென்றார்கள்.. ஆனால் இப்போதைய கல்வி முறைக்கும் அவர்கள் கற்பித்தற்கும் எவ்வளவு இடைவெளி அதனால் கற்றலிலிருந்து விடுபட்டு படிப்பு மட்டுமே போதும் என்ன உளவியலாக கட்டுபடித்தினார்கள்.. இப்போது இருக்கிற வளங்களை அறிவியல் என்கிற பெயரில் அழிக்கிறோம் என்பது தெரியாமலே!!
மீண்டும் கற்போம் மரபையும், மண்ணியலையும், மெய்யியலையும்.. வாழ்வோம்/கற்போம் நமக்கு தேவையானதை மட்டும் …கல்வி - படிப்பு - கற்றல்
20-25 வருடம் படித்து 30-35 வருடம் வேலை செய்ய வேண்டும்… இதுதான் கட்டமைக்கப்பட்ட நமது வாழ்ககை முறை.. கல்வி கொடுப்பவனும் வேலை கொடுப்பவனும் ஒருவனே!!!
7 வயதிற்கு பிறகே கற்பதற்கான பக்குவம் வரும் நிலைமையில் ஏன் 3 வயதிலிருந்து பள்ளிக்கு அனுப்பும் கட்டாய நிலமை… இந்த வயதிலேயே சிந்தனையைத் தடுக்கவேண்டும் என்பதே இப்போதைய கல்வி முறையின் திட்டம்… 7 வயது வந்து சிந்தித்து உள்வாங்கும் முன்னே இங்கே வேலை கொடுக்கும் நிறுவனங்களுக்கு வேண்டிய அடிபணிதலை பயிற்றுவிக்கிறார்கள்..
குறைந்தது 20 வருடம் வருடம் படிக்கவேண்டும் ஒரு நல்ல வேலைக்கு போவதற்கு.. நன்றாக கவனிக்கவும் வேலைக்கு போவதற்கு, தொழில் தொடங்க அல்ல. சரி படித்தவுடன் சேர்ந்த வேலை படிப்புக்கு சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது.. இப்போது வேலையை பழகவேண்டும் / படிக்கவேண்டும்.. இங்கும் கற்பது இல்லை.. இவையெல்லாம் அடுத்த 30-35 வருடம் வேலை செயவதற்கு.. இந்த வேலைக்கான படிப்பு இளம் வயதில் இழந்தது எவ்வளவு என்று ஒவ்வொருவரும் சிந்தித்தால் தெரியும்.. இதை எழுதுகிறவர்ககு 40+ வயது, வாழ்க்கை தேடலுக்கு நேரம் கிடைத்தனால் இந்த பதிவு… நிறைய பேர்களுக்கு இந்த தேடலுக்கான நேரம் கிடைப்பதில்லை.. இல்லை மயக்கத்தில் இருக்கிறார்கள்..
வேலைக்காக படிக்கவேண்டுமா.. நமக்காக கற்கவேண்டுமா? நமக்காக கற்றல் என்பதே இல்லை.. இங்கு அனைத்தும் இயங்குவது தனக்காக அல்ல… நம் மேல் தினிக்கப்பட்ட வேலைச்சமூகம் என்ற உளவியல்… உலகம் முழுவதும் வணிகம் செய்த இனம்.. இப்போது கடல்கடந்து சேவை செய்யப்போகிறது…
ஏன் கற்பது காணாமல் போனது… அல்லது மறுக்கப்பட்டதா / மறைக்கப்பட்டதா… ஆங்கிலேயன் அடிமைச் சேவகத்திற்காக உருவாக்கிய கல்வி முறையே பின்பற்றுவது என்பது எதை குறிக்கிறது.
கல்வியில் உள்ள அந்நியம்:
படிக்கும் மொழி தாய் மொழி அல்ல
படிக்கும் வரலாறு தன் இனத்தின் வரலாறு அல்ல
தன் நிலத்தின் மண்ணியல் படிப்பதே இல்லை
தொழில்
படித்ததில் பிடித்தது /வாட்சப்பில் வந்தது
No comments:
Post a Comment