Tuesday, February 13, 2018

சுவையான பகோடா!

தேவையான பொருள்கள்
கோஸ் (அரிந்தது)
1கப்
பெரிய வெங்காயம் (அரிந்தது)
1கப்
பச்சை மிளகாய்
3
இஞ்சி பூண்டு விழுது
1 மேசைக் கரண்டி
சோயா சாஸ்
1 மேசைக் கரண்டி
மைதா மாவு
4 மேசைக் கரண்டி
அரிசி  மாவு
2 மேசைக் கரண்டி
சோளமாவு

2 மேசைக் கரண்டி
கருவேப்பிலை
தேவையான அளவு
கொத்தமல்லி தழை
தேவையான அளவு
உப்பு
தேவையான அளவு
எண்ணெய்
தேவையான அளவு
சமையல் குறிப்பு விபரம்
செய்வது:
மிகமிக எளிது
உண்ணும் நபர்கள்:
4
தயாராகும் நேரம்:
30 நிமிடம்
சமைக்கும் நேரம்:
20 நிமிடம்


முன்னேற்பாடுகள்:

1. முட்டை கோஸ், வெங்காயம் இரண்டையும் நீளவாக்கில் அளவாக அரிந்துக்கொள்ளவும்.
2. பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
3 கருவேப்பிலை, கொத்த மல்லி இலை இரண்டையும் கழுவி ஆய்ந்து நறுக்கிக் கொள்ளவும்.

செய்முறை:

கோஸ், வெங்காயம், மைதா மாவு, அரிசி மாவு, சோள மாவு, சோயா சாஸ், இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி தழை, உப்பு அனைத்தையும் நீர் விடாமல் பிசைந்து கலவையை ஐந்திலிருந்து பத்து நிமிடம் வரை ஊற வைக்கவும்.

பின்னர் வாணலில் எண்ணெய் ஊற்றி சூடான பின் கலவையை கிள்ளி போட்டு பொன் நிறமாக பொரித்து எடுக்கவும்.

சுவையான மொறு மொறு பகோடா ரெடி.

கோஸ் சாப்பிட பிடிக்காத பெரியவர்களும் சிறுவர்களும் இந்தப் பகோடாவை விரும்பி சாப்பிடுவார்கள்.  நாம் சொல்லாதவரை இது கோஸ் பகோடா என யாருக்கும் தெரியாது.

முக்கிய குறிப்பு: கண்டிப்பாக நீர் விடக்கூடாது. வெங்காயத்தில் இருக்கும் நீரே போதுமானது. மாவு வகைகள் சுவைக்குத் தகுந்தார்போல் சேர்த்துக் கொள்ளலாம்.

பகோடா கொடுத்தவர்: உம்மு ஷமீம்
http://www.satyamargam.com

No comments: