பள்ளிவாசல்ல பயான் பேசுர மாதிரியே பேஸ்புக்ல பேசுனா எவன் கேட்பான்
இதென்ன முஸ்லீம்கள் மட்டும் இருக்கும் இடமா
பொதுதளத்தில் பேசத்தெரியாதவர்களை நட்பில் வைத்திருப்பது
அமைதிக்கி பங்கம் விளைவித்து நட்பில் நஞ்சு வந்துவிடும்
நான் முஸ்லீம் தான் எனது மதவழிபாட்டுதளத்திலும் என் இல்லத்திலும் ..............அதே நேரம்
வேலை பப்ளிக் யாவிலுமே ..... மனிதத்தைவிரும்பும் சராசரி மனிதனே..........................காரணம்
சுமார் 18 வருடங்கள் பலதரப்பட்ட மத மொழி நிறத்தாரோடு வாழ்பவன் அவர்கள் என்னை முஸ்லிமாக பார்ப்பதில்லை பொறுப்பான மனிதனாகவே பார்க்கிறார்கள்
நபிகள் சொல்கிறார்கள் .........குல்லுகும் ராயின் வர்ராயி மஸ்ஊலுன் அன் ரஃயதிஹி .............யென்று அதாவது
யாரெல்லாம் பொறுப்பாளியாக அமர்த்தப்பட்டீர்களோ அவர்கள் தங்கள் பொறுப்பிற்கான பதிலை இறைவனிடம் சொல்லியே தீரவேண்டுமென்று.
ஆகவே நான் அனைவருக்கும் பொறுப்பாளியாக வேலை செய்பவன்.......................என் மதம் தொழுகை நேரத்தில் தானே வந்துவிடும் அது போதும் மற்றநேரம் நான் பொறுப்பாளியான சக மனிதனே.
இது முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல மததுவேஷத்தை தூண்டும் அனைவரும் புரியவேண்டி.........
சிலரை அன்பிரண்ட் செய்த பிறகு ..இந்த பதிவு.
பின்குறிப்பு ....
தயவு செய்து இந்த மாதிரி நோக்கமுள்ள புரியாத ஆட்களுக்கெல்லாம் எதுக்கு பொதுதளம் ..அருமயான இந்த தளத்த யூஸ் பண்ணத்தெரியனும் யாவரும் பயன்படும்படி.
நன்றி Iskandar Barak அவர்களின் பகிர்வு
No comments:
Post a Comment