Sunday, February 25, 2018

உங்கள் தலைக்கு மேலே உயராத ....

#நிஷாமன்சூர்


உங்கள் தலைக்கு மேலே உயராத
பலவீனமான பிரார்த்தனைகளைக் கொண்டு
சிரியாவுக்காகப் பிரார்த்திக்கச் சொல்லாதீர்கள்,
சுவர்க்கத்து மலர்கள் என்று கசிந்துருகி
கொல்லப்பட்ட குழந்தைகளைப்
புனிதப்படுத்தி அமைதி கொள்ளாதீர்கள்
வலியில்லாத பிரார்த்தனைகளும்
ரத்தம் சிந்தாத நல்லாசிகளும்
உறக்கத்தின் சளைவா போல் ஒழுகி வடிகின்றன.
அரசியலற்ற பக்தியின் முனைமழுங்கிய அம்புகளை
தளர்ந்த கைகளில் எய்தபடி புலம்பும்
நோஞ்சான்களின் சாபத்தால்
விளையப்போவது ஒன்றுமில்லை.
#நிஷாமன்சூர்


பல்லாங்குழியின் புளியம் முத்துகளைப்போல
வெட்டி விசிறியெறியப்படும்
பச்சைக் குழந்தைகளின் உயிர்கள்
#சிரியப் படுகொலைகள்
#நிஷாமன்சூர்
#நிஷாமன்சூர்
படஉதவி .google

No comments: