நண்பர் சீர்காழி தாஜ் எழுத்தாளரும் கூட. கவிதைகள், கதைகள் என்று இவரது எழுத்துப்பங்களிப்பு பன்முகத்தன்மை வாய்ந்தது. இணைய இதழ்கள், தமிழகத்து வெகுசன மற்றும் சிற்றிதழ்கள் எனப்பல ஊடகங்களில் இவரது பல படைப்புகள் வெளியாகியுள்ளன.
தாஜ் அவர்கள் 'தமிழ்ப்பூக்கள்' என்னும் வலைப்பதிவினையும் நடாத்தி வருகின்றார். அதற்கான இணையத்தள முகவரியினை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். இவ்வலைப்பதிவில் தாஜ் அவர்களின் புனைவுகளை, அபுனைவுகளை மற்றும் கவிதைகளை, இலக்கியக்கட்டுரைகளை எனப்பல்வகை விடயங்களைப்பற்றிய படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்.
http://tamilpukkal.blogspot.ca/
Giritharan Navaratnam
-------------------------------------------------
உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
நண்பர் சீர்காழி தாஜ் இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.சிறந்த சொற்பொழிவாளர் ,மனிதநேயம் பெற்றவர்
அவர்களது சொந்த ஊர் சீர்காழி தனது ஊரில் இருந்துக் கொண்டு பல சேவைகளை செய்து வருகின்றார்
சிறு வயதிலேயே எழுத்தில் ஆர்வம், படிக்கும் போதே சமூக சேவையில் நாட்டம் காரணமாக பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து பயணித்தார் .
தாஜ் அவர்கள் ஒரு சிறந்த எழுத்தாளர் .அவர் எழுதிய பல சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் பலவற்றை நமது வலைப்பூவில் வெளியிட்டு மகிழ்கின்றோம் .மக்கள் அவைகளை விரும்பி படிக்கின்றார்கள்
தாஜ் அவர்கள் ஹாங்காங் ,ஸவூதி,துபாய் போன்ற நாடுகளில் சென்று பணிகள் செய்த அனுபவங்கள் அதிகம் .
அவர் எமக்கு சிறந்த நண்பர் .அவர் இல்லத்திற்கு நாங்கள் சென்றால் அன்புடன் உபசரிப்பார் .அவரோடு நாங்கள் வெளி ஊர்களுக்கு பயணித்த அனுபவங்கள் உண்டு
அவரது ஆக்கங்களை இங்கும் பார்க்கலாம்
facebook Tal
WEBSITES AND SOCIAL LINKS
Websites
http://www.tamilpukkal.blogspot.com
http://abedheen.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D/
அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)
'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்
நம்மைப்பற்றி நாம் அறிவோம்
நம்மை வாழ்வித்தவர்களை
நமக்கு கல்வி கொடுப்பவகளை
நம் உறவுகளை
நம் நண்பர்களை
நன்கு அறிந்து கொள்வதில்
நமக்கு மிகவும் மகிழ்வும் ,பலனும் .பலமும் ,உந்துதல் சக்தியும் கிடைக்கும்
இவரை வாழ்த்தி மகிழ்வதில் நாம் மகிழ்வடைகின்றோம் .
இறைவன் அருளால் தொடரட்டும் இவரது சேவைகள் .
இறைவன் அவருக்கு நீடித்த ஆயூளை கொடுத்து அருள இறைவனை பிரார்திக்கின்றோம்
கீழ் உள்ளதை சொடுக்கிப் (கிளிக் செய்து )பாருங்கள்
No comments:
Post a Comment