இன்றைய நிதர்சனத்தின்
விளிம்பில் நின்று
திடுக்குற்று வந்தவழியை
திரும்பிப் பார்கிறேன் ....
மனம் லயித்திருந்த
மாயங்கள் முழுமையிற்றி
துணுக்குகளாய் மின்மினுத்தன
கடந்துவிட்ட காலத்தை உணர்த்தின
மறதிப்புகை மண்டிப் படர்ந்திருந்த
மனக்கண்ணாடியை முழுவதும்
அழுத்தித் துடைக்க
பளிச்சென தெரிந்தேன் நானே
அன்றைய என்னில்
இருந்தவை யாவும்
இனிமையும் இளமையுமே
இடையிடையே கனவும் மகிழ்வும்
ஏனிந்த மாற்றம் இப்போது
இயற்கையின் கோரமா
இயலாமையின் இழிநிலையா
அதீத ஆசையின் தாண்டவமா ?
மாற்றம் ஒன்றே மாறாததென
கண்காணா மனவறையில்
மறைந்திருந்து பார்த்திருந்தால்
மருமம் என்னவென்று தெரிந் திடுமோ ?
ராஜா வாவுபிள்ளை
No comments:
Post a Comment