நிர்ணயிக்கப்பட்ட வேகத்தைவிட அதிகமாக வாகனம் செலுத்துவோரை ராடார் மூலம் கண்காணித்து, அந்தந்த வேகத்திற்கேற்ப அபராதம் விதித்து வருகிறது துபை போலீஸ். சரி, நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் ஒழுங்காக வண்டியோட்டுவோரைப் பாராட்டி பரிசு வழங்குவதுதானே முறை...
தொழில்நுட்ப உதவியுடன் அதை செய்ய முன்வந்திருக்கிறது துபை போலீஸ்.
நேற்று துபை சர்வதேச வர்த்தக மையத்தில் நிறைவுற்ற ஜிடெக்ஸ் தொழில்நுட்பக் கண்காட்சியில் துபை போலீஸ் ஒரு செயலியை (Mobile Application) அறிமுகம் செய்தது.
அது ஜிபிஎஸ் தொழில்நுட்ப உதவியுடன் ஓட்டுனரின் வேகத்தைக் கண்காணிக்கும். ஒவ்வொரு சாலையிலும் அதற்கு நிர்ணயிக்கப்பட்ட வேகத்திற்குள் பயணிக்கும் ஓட்டுனருக்கு அந்த செயலி பரிசைப் பெற்றுத்தரக்கூடிய 'வெள்ளைப் புள்ளி'களைச் சேகரிக்க ஆரம்பிக்கும். அதேவேளையில் வேகம் மீறப்பட்டால் வேகத்திற்கேற்ப சேகரித்து வைத்திருக்கும் புள்ளிகளிலிருந்து கழிக்கப்படும். (அதிவேகத்திற்கு ஏற்கனவே வழக்கத்தில் இருக்கும் ராடர் மூலம் அபராதம் விதிக்கப்படும் தண்டனையும் உண்டு).
ஒழுங்காக வண்டியோட்டினால் 'வெள்ளைப் புள்ளி'களை REDEEM செய்து பரிசுகளை வெல்லலாம்...
Rafeeq Sulaiman
No comments:
Post a Comment