ஒருத்தர்கிட்ட
எவ்வளவு தான் பணம் இருக்கட்டும்..அன்பும்,
அரவணைப்பும்,ஆறுதலும் இல்லையென்றால் அந்த பணத்தினால் எந்த பலனுமில்லை..
ஒருத்தர் இளவயதாக
இருக்கும் போது குடி கொண்டிருக்கும் அதிகாரம்,கெத்து நாள் போகப் போக படிப்படியாக குறைந்து போகிறது...
இதற்கு காரணம் உடம்பில் ஏற்படும் இயற்கை
மாற்றங்கள் தான்..
வயசு போகப்போக உடம்பில் ஒரு சின்ன பலகீனம்
வந்தாலும் மனசும் தளர்ந்து போகிறது.உடம்பும் தளர்ந்து போகிறது..
நம்மோடு இருக்கும் அதிகாரம்,ஈகோ எல்லாமே காணமல் போய்விடுகிறது..
இப்படியான நேரங்களில் உடனிருப்பவர்களின் ஒரு ஆறுதலான வார்த்தை தேவைப்படுகிறது..
அந்த ஆறுதல் அரவணைப்பு கிடைக்காத போது மனம் விரக்தி அடைகிறது..
சில இடங்களில் சுகவீனத்தால் படுக்கையில் கிடக்கும் வயதான பெரியவர்கள் சாப்பிட ஏதாவது கேட்டால் "சாப்பிட்டு விட்டு மலம் கழிக்கவா" என்ற சடாரென கேட்டு விடுகிறார்கள்...
"நீராகாரம் மட்டும் கொடுத்தால் போதும் "என்று அவர் காதுபடவே சொல்லி இவர்களாகவே அவருடைய ஆயுளுக்கு முற்றுபுள்ளி வைத்து விடுகிறார்கள்..
சில இடங்களில் ஏதாவது சுகவீனம் வந்தால் கூட " அப்படிச் செய்தீர்களலல்லவா அதனால் தான் இப்படி நேர்ந்து விட்டது" என்று சந்தர்ப்பம் தெரியாமல் மனதை நோகடித்து விடுவார்கள்...
இது போன்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சம்பந்த பட்டவர்கள் செய்த வேண்டாத காரியங்களை எல்லாம் பட்டியல் போட்டுச் சொல்லிக் விடுவார்கள்..
அந்த நேரத்தில் சம்மந்தபட்டவருக்கும் குழந்தை போல கேட்பதை தவிர வேறு வழித் தெரியாது..
இதற்கு காரணம் பிறர்
நம்மை பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் புரிதல்கள்..நடவடிக்கைகள்..
ஏழைகளை விட பணக்காரர்கள் பாடு தான் ரெம்ப கஷ்டம்..
வயசான பணக்காரர்கள் படுக்கையில் கிடந்து விட்டால் அவ்வளவு தான்..திரும்பி பார்க்க சிரமம் தான்..
இவர்களை வீட்டு வேலைக்காரர்கள் தான் கவனித்துக் கொள்ள வேண்டும்..
அதனால் தான் நபி(ஸல்) அவர்கள் தள்ளாத முதுமையை விட்டும் பாதுகாப்புத் தேடினார்கள்..
எவ்வளவு பணமிருந்தாலும் அதை வைத்து தன்னுடைய வலியை,வேதனையை பிறர் சுமக்கும் படிச் செய்ய முடியாது..
யாராக இருந்தாலும் உடல் நலம் பாதிக்கும் பொழுது ஆறுதல் சொல்ல ஒரு கரம் வேண்டும்..
அதனால் தான் நோயாளிகளை சந்தித்து ஆறுதல் சொல்ல நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்தார்கள்..
மனிதனின் மனசு அன்புக்கும்,ஆறுதலுக்கும் கட்டுப்பட்டது..அது சரியான முறையில் கிடைக்க வேண்டும்..மனம் வேதனை படக்கூடாது..அப்படி உண்மையான அன்பை,அரவணைப்பை கிடைக்கப் பெற்றவர்கள் பாக்கியம் செய்தவர்கள்..
புண்ணியம் செய்தவர்கள்..
ஆரோக்கியமாக இருக்கும் போது வைராக்கியத்தோடு இருக்கும் உள்ளம் உடல் பலகீனமானதும் வைராக்கியத்தை இழந்து விடுகிறது..சில சமயங்களில் வைராக்கியமாகவே இருந்து விடுகிறது..
நமக்கு வயசு போகப்
போக ஒரு பக்குவம் வந்துக் கொண்டேயிருக்கிறது..
இந்த உலகத்தில் ஒன்றுமில்லை என்று நினைப்பவர்களுக்கு ஒன்றுமில்லை..எல்லாம் இருக்கிறது என்று நினைப்பவர்களுக்கு
எல்லாமே இருக்கிறது..
நமக்கு ஆரோக்கியம் இருக்கும் போது நாம் மற்றவர்களை எப்படி நடத்துகிறோமோ அது போல் தான் நாமும் பிறரால் நடத்தப் படுவோம்..
வாழ்க்கை என்பது
கொஞ்ச நாட்கள் தான்..
இந்த கொஞ்ச நாட்களில் நாம் யாருக்கு என்னென்ன நன்மைகள் ,தீமைகள் செய்தோம்..இனி நம்மால் என்னென்ன செய்ய முடியம் என்பதை ஆரோக்கியத்தோடு இருக்கும் போதே மனதில் நிறுத்திக் கொண்டால்
#வாழும் வாழ்க்கை வரமாகும்..
மரணம் கூட நம் வசமாகும்..
Saif Saif
No comments:
Post a Comment