Saturday, October 21, 2017

வெள்ளியின் நினைவு...!

Samsul Hameed Saleem Mohamed
கடந்து இருவாரங்களுக்கு முன்பாக ஒரு தொலைபேசி அழைப்பு! எனது மானசீக ஆசிரியப்பெருந்தகை பெருமரியாதைக்குரிய சீசன்ஸ் முஹம்மது அலி அவர்களிடமிருந்து. எனது பேரன் துபாயிலிருந்து ஊருக்கு வந்திருக்கிறார் அவருக்கு உங்களை அறிமுகம் செய்து வைக்க விரும்புகிறேன்! அதனால் நீங்கள் வீட்டில் சாவகாசமாக இருக்கும் நாளை சொல்லுங்கள் அழைத்து வருகிறேன் என்று.
நேற்று வெள்ளிக்கிழமை ஜும்மாவுடைய தொழுகைக்கு நீடூர் பள்ளிவாசலுக்கு சென்றிருந்தபோது தனது இளைய மகனார் அண்ணன் Mohamedali Nowshathali மற்றும் பேரன் சகிதம் முஹம்மது அலி அத்தா அவர்கள் பள்ளியில் அமர்ந்திருப்பது கண்டு மகிழ்ந்தவனாக தொழுகைக்காக நானும் அமர்ந்து அதை நிறைவேற்றி வெளியில் வந்து அத்தா அவர்களுக்கு சலாம் சொன்னவுடன் ஆரத்தழுவி கொண்டார்கள் என்னையும் அங்கிருந்த லண்டன் Haja Maideen அவர்களையும் மிகவும் மகிழ்ச்சி பொங்க....!
வெளியில் வந்து மிகவும் பெருமிதம் கொண்டு என்னையும் அண்ணன் லண்டன் ஹாஜா மைதீன் அவர்களையும் தனது பேரனுக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள்! பள்ளியின் அருகில் இருந்த ஹாஜா மைதீன் அண்ணன் வீட்டிற்கு முதலில் சென்று சிறிது நேரம் அளவளாவி விட்டு! பிறகு எங்கள் வீட்டிற்கு வந்தார்கள்!

அத்தா அவர்களுடைய பேரன் Naseerali Sameerali நெய்வாசல் ஜின்னாஹ் தெரு சீசன்ஸ் வீட்டிற்கு மட்டும் பேரன் இல்லை! அறங்கக்குடி பள்ளிவாசல் தெரு மரைக்காயர் வீட்டிற்கும் பேரன் என்பதால் நெய்வாசலோடு அறங்கக்குடியின் நல்ல நினைவுகளையும் சேர்த்து பகிர்ந்தார் எங்கள் குடும்பத்தினருடன்!
அத்தா அவர்களுடைய அந்த அந்தக்காலமும் கூடவே செழுமையான அறிவும் மிகுந்த பேச்சு எங்கள் வீடெங்கும் ஒலித்தது! கூடவே எலுமிச்சை சாறில் தண்ணீரும் சிறிது சர்க்கரையும் கலர்ந்து குளிர்பானம் தயாரித்து கொடுத்த எனது மனைவிக்கு சிறப்பான பாராட்டு வேறு!
அத்துடன் நகைச்சுவையாக.... உனது போட்டோக்கள் சூப்பர்....! உன்னுடன் சேரும்போது நானும் இளைஞனாகிறேன் எனும் உத்வேகம் மிக்க பேச்சுக்களால்! அத்தா அவர்களுக்குள் இருந்த இளைஞர் என்னை எட்டிப்பார்த்தார்! என்னையும் விட தன் அகவை குறைந்தவராய்.......!
எனது ஆசிரியத்தந்தையே....! மேலும் ஆரோக்கியம் கொண்டு வாழிய பல்லாண்டு....!

Samsul Hameed Saleem Mohamed

லண்டன் ஹாஜா மைதீன்   அவர்களது வீட்டில் எடுத்த படம்


No comments: