Thursday, October 19, 2017

பேராசிரியர் என்பதையெல்லாம் தாண்டி, தன்னை அறிதல் பற்றிப் பேச முடிந்தது.




இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு பொதிகை சித்ரா அலைபேசினார். பொதிகையில் மீண்டும் நம் விருந்தினர் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். தயாரிப்பாளர் விஜயனும் தொகுப்பாளினி ப்ரியங்காவும் பேசினர். ஒத்துக்கொண்டேன்.
பிறகுதான் அதில் இருந்த பிரச்சனை புரிந்தது. நிகழ்ச்சி ‘லைவ் ப்ரொக்ராம்’. ஏற்கனவே எடுத்த நிகழ்ச்சி மாலையில். வேறொரு நாள் காலையில் போட்டார்கள்.
ஆனால் இது உண்மையிலேயே லைவ்!
காலை ஆறே காலிலிருந்து ஆறரைக்குள் வந்துவிடுங்கள் என்று திரு விஜயன் சொன்னார். நானும் சரி என்றேன்.

ஆனால் எனக்கதில் ஒரு பிரச்சனை இருந்தது. நான் இரவெல்லாம் விழித்துப் படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருப்பேன். காலையில் ஃபஜ்ர் தொழுதுவிட்டுத்தான் படுக்கவே செல்வேன்! இப்போது நிகழ்ச்சிக்காக நான் சீக்கிரமே இரவு இரண்டு மணிக்கெல்லாம் படுக்க வேண்டியதாகிவிட்டது!
நாலே முக்காலுக்கு அலார்ம் வைத்து ஐந்துக்கெல்லாம் எழுந்து குளித்து ஐந்தரைக்கெல்லாம் ரெடியாகியாச்சு! நிகழ்ச்சி முடிந்து வந்த பிறகுதான் காலைக்கடன்களையெல்லாம் கழிக்க வேண்டும்! அவசரமாகவெல்லாம் செய்ய முடியாது!
நண்பரும் சீடருமான காசிம் அவர் காரில்வந்து அழைத்துச் சென்றார். நண்பர் ராஜேஷும் உடன் வந்தார். நிகழ்ச்சி ஏழரைக்குத்தான் தொடங்கியது. எனக்கும் கொஞ்சம் மேக்அப்பெல்லாம் செய்தார்கள்! என்ன கேட்கப் போகிறார்கள் என்பது ரகசியமாகவே இருந்தது.
சன் டிவி, ஜெயா டிவியில் பேசியபோதெல்லாம் விலாவாரியாக கேள்வி பதில்களைக் குறித்து வைத்து அந்த ஆர்டரிலேயே கேட்டார்கள். ஆனால் இது வொர்ட்ஸ்வொர்த் சொல்லும் spontaneous overflow of powerful feelings – என்று சொல்லும்படியான ப்ரோக்ராம்!
நானும் விடவில்லை. என்ன கேட்கிறார்கள் பார்க்கலாம் என்று இருந்துவிட்டேன். கேட்கக் கேட்க, வந்ததை சொல்லிக்கொண்டே வந்தேன்! பேட்டி ரொம்ப திருப்தியாகவும் பிரம்மாதமாகவும் இருந்ததாக சொன்னார்கள்.
எனக்கொரு நிம்மதி. இந்த பேட்டியில்தான் எழுத்தாளன், பேராசிரியர் என்பதையெல்லாம் தாண்டி, தன்னை அறிதல் பற்றிப் பேச முடிந்தது. என் குருநாதர் மறைந்து வாழும் ஹஸ்ரத் மாமா பற்றியும் கொஞ்சம் சொல்ல முடிந்தது.
19.10.17 அன்று பொதிகையில் ஒளிபரப்பான என் நேர்காணலில் என் பகுதியை மட்டும் இங்கே வலையேற்றி இருக்கிறேன்.
https://youtu.be/-pzOqqMMA68
அன்புடன் Nagore Rumi
ரூமி

No comments: