Tuesday, October 17, 2017
குர்ஆன் மனிதர்களுக்கு போதிப்பது என்ன?
சிறு தொகுப்பு!!
1. அல்லாஹ்வுக்கு எதையும்/எவரையும் இணையாக்க கூடாது
*குர்ஆன் 17:23*
2. ஒப்பந்தங்களை முறித்து மாறு செய்ய கூடாது.
*குர்ஆன் 2:27,16:92*
3. இரத்த உறவுகளை முறிக்க கூடாது. சேர்ந்து வாழ வேண்டும்.
*குர்ஆன் 2:27,47:22*
4. உண்மையை பொய்யுடன் கலக்க கூடாது. உண்மையை மறைக்கவும் கூடாது.
*குர்ஆன் 2:42*
5. நீங்கள் செய்யாமல், ஊருக்கு மட்டும் உபதேசம் செய்ய கூடாது.
*குர்ஆன் 2:44 61:2*
6. பூமியில் குழப்பம் செய்து திரிய கூடாது.
*குர்ஆன் 2:60*
7. ஆன்மீக ஏமாற்றம் செய்து பிழைக்க கூடாது.
*குர்ஆன் 2:79*
8. பெற்றோருக்கும் நெருங்கிய உறவினருக்கும் அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நன்மை செய்ய வேண்டும்.
மனிதர்களுக்கு நல்ல வார்த்தையையே கூற வேண்டும்
*குர்ஆன் 2:83*
9.. வீணாக இரத்தம் சிந்தி, உறவினர்களை வீட்டை விட்டு வெளியேற்ற கூடாது.
*குர்ஆன் 2:84*
10. உங்களுக்கு எதிராக நடப்பவர்களையும் மன்னியுங்கள்.
*குர்ஆன் 2:109*
11. நல்லவற்றை/ தூயவற்றையே சாப்பிட வேண்டும்.
*குர்ஆன் 2:168 ,172*
12. முன்னோர்களை குருட்டுத்தனமாக பின்பற்ற கூடாது.
*குர்ஆன் 2:170*
13. செல்வங்களை உறவுகளுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், யாசிப்பவருக்கும், அடிமைகளுக்கும் கொடுத்து, ஒப்பந்தங்களை நிறைவேற்ற வேண்டும்.
*குர்ஆன் 2:177*
14. மற்ற மனிதர்களின் சொத்துக்களை அபகரிக்க கூடாது. லஞ்சம் கொடுக்க கூடாது.
*குர்ஆன் 2:188*
15. உங்களுடன் போர் புரிபவர்களோடே போர் புரிய வேண்டும். அதிலும் வரம்பு மீற கூடாது. போர் செய்யாது விலகிக்கொண்டால், அநியாய காரர்கள் மீதே தவிர வேறு எவர் மீதும் பகைமை கொள்ள கூடாது.
*குர்ஆன் 2:190-193*
16. எதிரிகளில் ஒருவன் அடைக்கலம் கேட்டால் கொடுத்து, பாதுகாப்பான இடத்தில் சேர்க்க வேண்டும்
*குர்ஆன் 9:6*
17. உங்களுடன் போரிட சக்தியற்றவர்களுடன் போர் செய்ய கூடாது. அவர்கள் எதிரியாக இருந்தாலும் சரி.
*குர்ஆன் 4:90*
18. எதிரிகள் சமாதானத்தை விரும்பினால், சமாதனமாக வேண்டும்.
*குர்ஆன் 8:61*
19. அப்பாவிகளை பலவீனர்களை காப்பாற்றவே போர் செய்ய வேண்டும்.
*குர்ஆன் 4:75*
20. பூமியில் குழப்பம் செய்ய, விவசாயத்தை அழிக்க கூடாது..
*குர்ஆன் 2:205*
21, நல்ல வழியில் அநாதைகளுக்கும் குடும்பத்திற்கும் வழிப்போக்கர்-களுக்கும் தர்மம் செய்
*குர்ஆன் 2:215*
22. மதுபானம் சூதாட்டம் கூடாது.
*குர்ஆன் 5:90*
23. அநாதைகளை சீர்திருத்தி பராமரிக்க வேண்டும்.
*குர்ஆன் 2:220*
24. மாதவிடாய் காலத்தில் உடலுறவு செய்ய கூடாது.
*குர்ஆன் 2:222*
25. தர்மத்தை தனக்கு தரும் கடனாக இறைவன் பார்க்கிறான். அக்கடனை திருப்பி கொடுத்துவிடுவான்.
*குர்ஆன் 2:245*
26. மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை.
*குர்ஆன் 2:256 10:99 18:29*
27. தர்மம் செய்து விட்டு சொல்லிக்காட்ட கூடாது.
*குர்ஆன் 2:262-264*
28. நல்லதையே தர்மம் செய்ய வேண்டும்..
*குர்ஆன் 2:267*
29. தேவையுள்ள-வர்களை கண்டுபிடித்து உதவ வேண்டும்.
*குர்ஆன் 2:273*
30. வட்டி வாங்க கூடாது.
*குர்ஆன் 2:275-276,279*
31. கடன் வாங்கியவருக்கு திருப்பி தர முடியாவிட்டால், அவருக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கும்வரை அவகாசம் கொடுக்க வேண்டும்.
*குர்ஆன் 2:280*
32. கடன் கொடுக்கல் வாங்கல்களை எழுதி கொள்ள வேண்டும். அதற்காக நல்ல சாட்சியாளர்களை வைத்து கொள்ள வேண்டும்.
எழுத முடியாவிட்டால், அடமானங்களை வைத்து செய்ய வேண்டும்.
*குர்ஆன் 2:281-282*
33. நன்மையான- வற்றை ஏவி தீயதை தடு.
*குர்ஆன் 3:104,110,114*
34. கோபத்தை அடக்கிகொள். மனிதர்களை மன்னித்து விடு.
*குர்ஆன் 3:134*
35. தவறு என்று அறிந்த பின் அதில் தொடர்ந்து இருக்காதே.
*குர்ஆன் 3:135*
36. மற்றவர்களுடன் மென்மையாக நடந்து, சொல்லில் கடுமையாக இல்லாமலும், மற்றவர்களுடன் ஆலோசனை செய்பவராக இருக்க வேண்டும்.
*குர்ஆன் 3:159*
37. கஞ்சத்தனம் கூடாது.
*குர்ஆன் 3:180*
38. மற்றவர்களின் நோவினை செய்யும் வார்த்தைகளை கேட்டாலும், பொறுமையாக இரு.
*குர்ஆன் 3:186*
39.வானங்கள் பூமியின் படைப்புகளை சிந்தித்து பார்க்க வேண்டும்.
*குர்ஆன் 3:190-191*
40. நற்கூலி வழங்கப்படுவதில் ஆண் பெண் பாரபட்சம் இல்லை.
*குர்ஆன் 3:195 4:124 16:97 40:40*
41. இறந்தவர் விட்டு செல்லும் சொத்தில் பெண்ணுக்கும் பங்கு உண்டு.
*குர்ஆன் 4:7*
42.சொத்து பிரிக்கும் போது அவ்விடத்திற்கு, அநாதையோ, ஏழையோ வந்தால் அவர்களுக்கும் ஏதாவது கொடுத்து, அன்பான வார்த்தைகளை அவர்களுக்கு கூற வேண்டும்.
*குர்ஆன் 4:8*
43. அநாதைகளின் சொத்துக்களை, அவர்களை பராமரிப்பதாக கூறி சாப்பிட கூடாது..
*குர்ஆன் 4:6,10*
44.பெண்களை வற்புறுத்தி திருமணம் முடிக்க கூடாது.
45. மனைவிகளுடன் அழகான முறையில் நடந்து கொள்ள வேண்டும்.
எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment