வெந்தபுண்ணில் வேல்வீசி
----- மாபாதகம் செய்திடுவார்
தாமே வலியவன்றெண்ணியே
----- எளியோரை வஞ்சிப்பார்
பூமியைமிதித்தே நடப்பார்
----- தொடக்கம் தெரியாதோர்
வல்லோன் இறையோனை
----- கிஞ்சித்தும் நினையாதோர்
மண்ணில் பிறந்தோரெல்லாம்
----- ஒருநாள் மரித்திடுவார்
நிலைத்தே நிற்பேனென
----- நினைப்பதும் அறிவீனமே
மன்னாதி மன்னரெல்லாம்
----- மறைந்தனரே அறிவீரோ
நிலைப்பது எதுவுமில்லை
----- பிறப்பது இறப்பதற்கேயாம்
வெம்பிப்பழுத்த பழத்தினில்
----- சுவையும் இருந்திடுமோ
மரத்தில்காய்த்து கனிந்தபழம்
----- இனித்திடுமே இறுதிவரை
இன்முகம்காட்டி வாழ்வோம்
----- இன்பம்கூடுதல் பெறுவோம்
இருக்கும்வரை எளியோரை
----- அரவணைத்தல் அறமன்றோ
சொந்தங்களை துரத்திவிட்டு
----- தனிமரத் தோப்பாய்
நடுக்கடலில் தனித்தீவாய்
----- வாழ்ந்தென்ன காண்பாய்
மானமிழந்து மதியிழந்து
----- பணமே பிரதானமென
வையகத்தில் வாழ்ந்திருந்து
----- காலன்வந்தும் போவதுநிச்சயம்
ராஜா வாவுபிள்ளை
No comments:
Post a Comment