ஒரு முறை எனது புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சியில் நான் முமுவதுமாக புறக்கணிக்கப்பட்டேன்.நான் தான் அந்த புத்தகத்தை எமுதினேன் என்பதை பலருக்கும் தெரியாது, வெளியிட்டு நிகழ்ச்சியில் நான்காவது வரிசையில் இருந்தேன். இருந்தாலும் அந்த புத்தகத்தை எமுதியதற்க்கான உயர்வை வல்ல இறைவன் எனக்கு தான் கொடுத்தான். புத்தகம் வெளியிட்டு நிகழ்ச்சிக்கு வந்த என் மாணவர் மிகவும் வருத்தம் அடைந்தான்.அவன் எனக்கு தம்பி மற்றும் நல்ல நண்பர் கூட. அவனுக்காகவே எனது கல்வி நிகழ்ச்சிகளை தனியாக நடத்த ஆரம்பித்தேன் மற்றும் புத்தகங்களை தனியாக வெளியிட்டேன்.
கல்வி நிகழ்ச்சிகள் மற்றும் புகைபடங்களை பதிவு செய்ய ஆரம்பித்தேன்.(வரலாறு ரொம்ப முக்கியம்) .அப்போது இருந்துதான் சமூக வலைதளங்களை என் கல்வி செய்திகளை அனுப்ப கற்றுக் கொண்டேன்.ஒவ்வோரு நிகழ்ச்சிகளையும் பதிவு செய்தேன்.
இன்று எனது 29 வயதில் நான் இந்தியா முமுவதும் உள்ள மாணவர்களுக்கு வழிகாட்ட இதுவரை 27500 புத்தகங்களை பிரிண்ட் செய்து 14000 புத்தகங்கள் கிராமப்புற மாணவர்களுக்கும் மாற்றுத்திறாளிகளுக்கும் கொடுத்துள்ளேன்.
மிதம் உள்ள புத்தகத்தை விற்று என்னுடைய கல்வி வழிகாட்டுதலுக்கு பயன்படுத்துகிறேன். என் புத்தகத்தை பிரிண்ட் செய்ய நிலவொளி பதிப்பகம் பெரிதும் உதவியது.
இதுவரை 7 புத்தகங்களை எமுதியுள்ளேன்.
வசதி படைத்தவர்கள் வாமும் ஊர்களில் உள்ளவர்கள் என் புத்தகத்தை வாங்கி பணம்தராமல் ஏமாற்றவும் செய்து இருக்கிறார்கள்.
எனது 8 வது புத்தகத்தை, வழக்கமாக பிரிண்ட் செய்ய உதவும் நிலவொளி பதிப்பகம் இல்லாமல்,
ஒரு சகோதரரின் குடும்பத்திற்க்கு உதவும் என்ற நோக்கில்
மண்ணடியை சேர்ந்த நன்றாக வாழ்ந்து நொடித்துப்போன ஒரு சகோதரின் வருமானத்திற்க்கு உதவும் என்ற நோக்கில் கொடுத்தேன், ஆனால் ...........
...........................
இன்று புத்தகம் தர ஒப்புக் கொண்டும் தரவில்லை.
அதனால் சரியான நேரத்தில் மாணவர்களுக்கு வழிகாட்ட கொடுக்க முடியாமல் இருக்கிறேன்.
நமக்கு புத்தகம் பிரிண்ட் செய்ய
உதவுபவர்களை விட்டு, நாம் ஒருவருக்கு உதவ நினைத்தால் இப்படி செய்கிறார்.
இதுபோன்று தான் கல்வியில் பின்தங்கிய சமுதாய மக்களுக்காக உழைக்கும் போது, அந்த சமுதாய மக்களால் அதிகமாக ஏமாற்றப்படுகிறேன்.
இதுவரை 4,20000 க்கு மேற்ப்பட்ட மாணவர்களுக்கு நேரில் வழிகாட்டல் கொடுத்துவிட்டேன்.
கல்வி வழிகாட்டல் கொடுக்கும் போது கூட , நம்மை சசுற்றி ஏமாற்றுபவர்கள் அதிகமாக வாழ்ந்து வருகிறார்கள் .அவர்களுக்கு வல்ல இறைவன் தான் நல்ல புத்தியை கொடுக்கனும்.
சில நேரம் என் சொந்தகாரவர்களுக்கும், அனைத்து சமுதாயத்தை சேர்ந்த என் ஊர் மாணவர்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு மேம்பாட்டிற்க்காக உழைத்தால் போதும் என்று என் மனதில் நினைக்கும் போது கூட ,வல்ல இறைவன் எனக்கு மலையாள மனோரமா புத்தகத்தில் 50 பக்கங்கள் தொகுத்து இந்தியா முமுவதும் உள்ள மாணவர்களுக்கு வழிகாட்ட வாய்ப்பு கொடுத்துள்ளான்.
எனது புத்தகம் விரைவில் கிடைக்க துஆ செய்யுங்கள்
இறைவன் துணையுடன் என்னால் , JMC எனக்கு கொடுத்த கல்வியை, மற்ற மாணவர்கள் பயன்பட வழிகாட்டுதல் கொடுப்பேன், வல்ல இறைவன் தான் ஏமாற்றுக்காரவர்களிடம் இருந்து பாதுகாப்பு கொடுக்கனும். பயணங்களை எளிமையாக்க வேண்டும்.ஆமின்.
MOHAMED RABIK
No comments:
Post a Comment