Wednesday, May 17, 2017

மெட்ரோ இரயில் மற்றும் பேருந்து வசதிகள் சிறப்பாக


Mohamed Salahudeen

சிங்கப்பூரில் மக்களின் போக்குவரத்துக்கான மெட்ரோ இரயில் மற்றும் பேருந்து வசதிகள் சிறப்பாக இருப்பது எல்லோரும் அறிந்ததுதான் ஆனால் அது இத்தனைச் சிறப்பாக இருக்குமென்று நான் நினைக்கவில்லை.
இன்று பேருந்து நிறுத்தத்தில் நின்றுக்கொண்டிருந்தேன், என் அருகே ஒரு வயதான முதியவர் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார்.
இந்த முதியவர் எப்படி பேருந்தில் பயணிக்கமுடியும் என எண்ணிக்கொண்டிருந்தப்பொழுதில் ஒரு பேருந்து வந்தது முதியவர் பேருந்தை நோக்கிக் கொஞ்சம் முன்னேறினார், இதை அறிந்துக்கொண்ட பேருந்து ஓட்டுனர் கீழே இறங்கி வந்து சக்கர நாற்காலியை பேருந்துக்குள் செல்வதற்கு ஒரு இரும்புப் பலகையை பேருந்திலிருந்து வெளியே இழுத்து பேருந்துக்குள் சக்கர நாற்காலி செல்லுவதற்கு உதவிச்செய்து பின்னர் தன் இருக்கைக்கு வந்தார்.
இந்த நாட்டில் பேருந்து நிலையம், மெட்ரோ இரயில் நிலையம் மற்றும் அனைத்துக் கட்டிடங்களும் ஊனமுற்றோர்களும் சிரமமின்றி பயணிக்கக்கூடிய வசதியை ஏற்படுத்தி இருக்கினறனர்.

Mohamed Salahudeen

No comments: