மழையினிலே மயிலாடும்
பாட்டினிலே குயிலாடும்
அணலினிலே வெயிலாடும்
கனவினிலே துயிலாடும் ....
இருட்டினிலே திகிலாடும்
காற்றினிலே துகிலாடும்
வானிலே முகிலாடும் ....
காதலிலே மோகமாடும்
துயரத்திலே சோகமாடும்
பந்தயத்திலே வேகமாடும்
தொண்டையிலே தாகமாடும்
குளிரினிலே தேகமாடும்
இசையினிலே ராகமாடும் ....
போரினிலே தேசமாடும்
வாழ்க்கையிலே நேசமாடும்
உள்ளத்திலே பாசமாடும்
மலர்களிலே வாசமாடும் ....
நாவினிலே சொல்லாடும்
காதினிலே செல்லாடும்
வயலினிலே நெல்லாடும் ....
குடலினிலே பசியாடும்
உணவினிலே ருசியாடும்
இரவினிலே பனியாடும்
கொடியினிலே கனியாடும் ....
ஊர்வலத்திலே அணியாடும்
தொழிலகத்திலே பணியாடும்
உடலினிலே பிணியாடும் ....
முதுமையிலே நரையாடும்
அலையினிலே நுரையாடும்
வழக்கினிலே சாட்சியாடும்
திரையினிலே காட்சியாடும் ....
இரும்பினிலே காந்தமாடும்
அமைதியிலே சாந்தமாடும்
கவிதையிலே சந்தமாடும்
உறவினிலே பந்தமாடும் ....
கலவரத்திலே வன்மையாடும்
உபசரிப்பிலே தன்மையாடும்
தொழுகையிலே நன்மையாடும் ...
அப்துல் கபூர்
No comments:
Post a Comment