இந்த பிரியாணி திருச்சி தக்னி வீட்டு பிரியாணியை நினைவுபடுத்தியது. இங்கே பாஸ்மதி அரிசிக்கே அனைவரிடமும் வரவேற்பு இருக்கும் ஆயினும் மலையாளிகளையும் பார்க்க முடிந்தது. சாப்பிட்டு முடித்தவுடன் கையை முகர்ந்து பார்த்தால் வாசனை பெரிதாக இல்லை.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு பாஸ்மதி அரிசியிலே தினமும் வெறும் சோறு உண்பார்கள். அன்று குக்கரில் வேகும்போது வாசனை மூக்கை துளைக்கும்.
தலப்பாகட்டு ஆம்பியன்ஸ் மற்றும் வகைகள் நிறைவாக இருந்தது . டெல்லி தர்பார் போன்ற உணவகங்கள் விலையை குறைத்துள்ள நேரத்தில் சற்று மெனுவை மறுபரிசீலனை செய்திடலாம் . இங்குள்ள செட்டிநாட்டு உணவகங்கள் பெரிய அளவில் புகழ் பெறாததற்கு விலையும் காரணி.
தோழர் பிலால் பிரியாணிக்கு போடி சென்றார் நாம் அவ்வளவு தொலைவு செல்லாமல் கராமாவில் முடித்து கொண்டோம்.
Sheik Mohamed Sulaiman
கராமா சர்வ சமையல்களின் கைவண்ணக் கூடம்....
-Athavullah Athavullah
No comments:
Post a Comment