Noor Mohamed
முத்தம்'
**********
முத்தம்
மெல்லிய சத்தம்
கேட்குது உலகில் நித்தம்!
அன்னையின் முத்தம்
அன்பைப் பொழியும்
கன்னியின் முத்தம்
காதலைப் பொழியும்
கல்வியில் முத்தம்
அறிவை வளர்க்கும்
கலவியில் முத்தம்
காமத்தைப் பெருக்கும்
மேகங்கள் தம்மோடு முத்தமிட
பேரொலியாய் இடியானது
மழைத்துளிகள் மண்மகளை முத்தமிட
வழிந்தோடி நதியானது
மண்ணெழும்பி நின்று வெண்ணிலவை
முத்தமிட முயன்று முடியாமல் போனதால் மலையானது
நீலக் கடல்மெல்ல வந்து கரைமகளை முத்தமிட
கண்கவரும் கலையான அலையானது
இளமையின் முத்தம் இனிமைதரும்
முதுமையின் முத்தம் கனிவைத்தரும்
பிள்ளையின் முத்தம் இன்பமே எனினும்
பேரனின் முத்தம் பேரின்பமன்றோ
தலைவன் தலைவியை முத்தமிட்டான்
தலைமுறை அங்கே கருவானது
கவிஞன் கற்பனையை முத்தமிட்டான்
கவிதை இங்கே உருவானது!
Noor Mohamed
No comments:
Post a Comment