எனக்கு நன்கு அறிமுகமான, ஒரு பிரபல தொழிலதிபர் குடும்பம் ஒன்று, புனித ஹஜ் ஜை நிறைவேற்ற, மக்கா மாநகருக்கு வருகை புரிந்தது. அவர்களுடன் 85 வயது மதிக்கத் தக்க, ஒரு மூதாட்டியையும் அழைத்து வந்திருந்தனர். அந்த வயதான பெண்மணியை அழைத்துக் கொண்டு, என்னை பார்ப்பதற்காக நான் பணி புரிந்த மருத்துவ மனைக்கு வந்தனர்.
மிகுந்த மூச்சுத்திணரல் (respiratory distress) நோயால் அவதிப்பட்ட அவரை, ICU வில் வைத்து அவசர சிகிச்சை மேற் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. இந்த உடல் நிலையில் அவரை ஹஜ் பயணம் மேற்கொள்ள எப்படி அநுமதி வழங்கினார்கள் என்பது மருத்துவர்களான எங்களுக்கும் புரியவில்லை. ஹஜ் பணியை மேற் கொள்ளும் நிலையில் அவர் இல்லை. அவர் உடலில் சக்தியும் இல்லை. அவருடன் வந்த உறவினர்கள் மதினா செல்லும் அவசர கதியில் இருந்தார்கள். அந்த பெண்மணியை உடன் இருந்து கவனிப்பதற்கும் எவரும் இல்லை.
அவர் உறவினர் ஒருவர் மிகுந்த தயக்கத் துக்கு பின், கோரிக்கை ஒன்றை என் முன் வைத்தார். அதாவது அந்த பெண்மணியை மருத்துவர் குழு ஏற்று எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் மிகுந்த அளவில் சிகிச் சையை தொடர வேண்டாம். அவர் இறந்தா லும் அது பற்றி கவலை இல்லை. மக்காவில் நல்லடக்கம் செய்து விடுவோம். பணம் எவ் வளவு ஆனாலும் பரவாயில்லை.செலவு செய்ய தயாராக இருக்கிறோம். அழாக்குறை யாக அவர் வைத்த வேண்டுகோள் என்னை திடுக்கிட வைத்தது.
அவரது தவறான வேண்டுகோளை மருத்து வர் குழு நிராகரித்து விட்டது. என்றாலும் வேண்டுகோள் விடுத்த அந்த நபரிடம் நான் கேட்டேன்...
" இந்த நிலையில் இந்த பெண்மணியை ஹஜ் செய்வதற்கு ஏன் அழைத்து வந்தீர்கள்....."
அவர் சொன்னார்....
"புனித மக்காவில், ஹஜ்ஜுடைய நாளில் தன் உயிர் பிரிய வேண்டும் என்ற நேர்த்திக் கடனில் அவர் எங்களுடன் வந்துள்ளார். எங் களால் அவரது வேண்டுகோளை நிராகரிக்க இயலவில்லை. எங்களோடு அழைத்து வந்து விட்டோம். இறைவன் அவரது கோரிக்கை யை நிறைவேற்றுவான் என்று உளமார நம்பு கிறோம்."
மக்காவில் வைத்து, 'ஹஜ் நாளில்' உயிர் பிரிய வேண்டும் என்ற ஆதங்கத்தில் ஹஜ் பயணம் மேற் கொள்ளும் இந்த முதியோர்களை நினைத்தால் மிகவும் பரிதாபமாக இருக்கிறது. இவர்களின் இந்த வித்தியாசமான எண்ணம் சரியா என்பதும் புரியவில்லை. மக்காவில் மரணம் எய்தினால் நேராக சுவர்க்கம் புக முடியும் என்று இவர்கள் மிகவும் தீவிரமாக நம்புகிறார்கள்.
No comments:
Post a Comment