சர்வதேச மட்டத்தில் ஓர் தரமான இணையத்தளம் (NIDUR SEASONS) நீடூர் சீசன்ஸ்
அவ்வப்போது என் பல படைப்பு விதைகளுக்கு நீர் ஊற்றி வளர் த்தெடுக்கும் களம்
அந்த வகையில் அன்பான என் நானா முகம்மட் அலி ஜின்னாஹ் அவர்களுக்கு
என்னிதயத்தின் ஆழத்திலிருந்து பதியும் நன்றிகள்
-Kalaimahel Hidaya Risvi
http://nidurseasons.blogspot.
---------------------------------------------------------------------------
முகநூல் திண்ணை..7
------------------------
முகமது அலி காக்கா...
முழுப் பெயர் முகம்மது அலி ஜின்னா பி.ஏ.பி.எல்._ நீடூர்..
இந்த முகநூலில் அறிமுகமானவர்கள்...அவ்வளவாக பழகாவிட்டாலும் கூட ரெம்ப மரியாதை தெரிந்தவர்களாக வலம் வருகிறார்கள்...
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்..அதை இவரின் அணுகுமுறையில் தெரிந்து கொள்ளலாம்..
வழக்கறிஞருக்கு படித்து இருப்பதால் அனைத்து விஷயங்களையும் மிக அழகாக சொல்கிறார்கள்..
"மனதில் தோன்றும் எண்ணங்கள்" என்ற தலைப்பில் கவிதைகளும்,கட்டுரைகளும்
எழுதி உள்ளார்..
காயிதே ஆஸம் ஜின்னா அவர்களின் மேல் இவரின் தந்தை ஹாஜி அப்துல் காதர் சாகிப் அவர்களுக்கு இருந்த ஈடுபாட்டால் முகமதலி ஜின்னா எனப் பெயர் சூட்டப் பட்டதும் முதன் முதலில் அவர் ஊரில் ஜின்னா என்று பெயர் வைக்கப் பட்டதும் நம்ம காக்காவுக்கு தான்..
எது நடந்தாலும் எனக்கு கவலையில்லை..இறைவன் நாட்டபடி தான் எதுவும் நடக்கும் என்று புரோபைலில் எழுதி வைத்திருப்பதில் இவரது ஈமானின் உறுதியை தெரிந்து கொள்ளலாம்..
சிலருக்கு சிலர் மேல் ஈடுபாடு வரும். அப்படி என்னை ஈர்த்தவர் இந்த முகமது அலி காக்கா...
என்னவோ தெரியவில்லை. எனக்கு இவரைப் பிடித்துப் போயிற்று...
நான் எழுதிய சில பதிவுகளை கூட தனது வலை தளத்தில் (nidurseasons.blogspot.in) பதிவிட்டிருக்கிறார்கள்...
என் பதிவுகளை மட்டுமல்ல யாருடைய பதிவாக இருந்தாலும் அவரின் மனதுக்கு எது சிறப்பாக படுகிறதோ அவைகளை தயக்கமின்றி பகிர்வதில் காக்காவுக்கு நிகர் வேறில்லை...
வக்கீலுக்கு படித்தாலும் தனது குடும்ப தொழிலான பர்னிச்சர் தொழிலில் வளர்ந்தவர்கள்..
அந்த காலத்திலேயே சிங்கப்பூர்,ஜப்பான்,பிரான்ஸ்
எனப் பறந்தவர்கள்..
இவர்களை பிடித்து போனதற்கு இன்னொரு காரணம் கோட்டாத்தூரில் வாழ்ந்து மறைந்த சதாவதானி செய்கு தம்பி பாவலர் அவர்களின் மகனார் செந்தாமரை கே.பி.எஸ்.ஹமீது அவர்களை அச்சு அசப்பில் அப்படியே நினைவு படுத்துகிறது இவரது முகம்..
ஊரில் சில வரலாற்று தடங்கள் சில பிரச்சினைகளால் அழிக்கப் பட்ட போது ரெம்பவே ஆவேசப் பட்டவர்கள் செந்தாமரை அவர்கள்..
அப்படிப் பட்ட ஒரு உணர்வு முகமதலி காக்காவுக்கும் இருப்பது போல் உணர்கிறேன்..
ஆனாலும் சில நேரங்களில் முகநூலில் எழும் வாக்கு வாதங்களில் மிக கண்ணியமாக நடப்பவர்..
செந்தாமரை அவர்கள் மறைந்தாலும் வாழும் இந்த செந்தாமரையாக காக்காவை பார்க்கிறேன்....
இவரிடம் நட்பு கொள்ள எந்த தயக்கமும் வேண்டாம்.,பழகுவதற்கு இனிமையானவர்..
அன்பானவர்..
இந்த தாமரை கெட்ட தண்ணீரோடு ஒட்டாவிட்டாலும் பிடித்த நல்ல உள்ளங்களோடு ஒட்டிக் கொள்ளும்..
வயசானால் சிலர் அதிகமாக பேசுவார்கள்..சிலர் அதிகமாக எழுதுவார்கள்...
இவர் பேசி பார்த்ததில்லை.
ஆனால் எழுதுகிறார்..
பழுத்த பழம் என்று சொல்வார்கள்.
இந்த பழம் சுவை மட்டுமல்ல மன திருப்தியையும் தரும் ஒரு கனிந்த ஞானப்பழம்...
#இன்னும் .வரும்..
Saif Saif
Saif Saif
மனநிலைகள் நிமிடத்திற்கு நிமிடம் மாறக் கூடியது...
காதலுக்கும் திருமண த்திற்கும் உள்ள வித்தியாசம்
யாருகிட்ட...
மறந்து விட்டீர்களே ..!
No comments:
Post a Comment