Monday, September 28, 2015

புனித ஹஜ் பயணம் - சில உண்மைகள் (2)+(3)

 Vavar F Habibullah

புனித ஹஜ் பயணம் - சில உண்மைகள் (2)

"வக்ப் வாரியம், கோடிக்கணக்கான சொத்துக் களை உள்ளடக்கிய, மகா நிறுவனம். சட்ட நுணுக்கம் அறிந்த, திறமையான வழக்கறிஞர் அல்லது ஒரு சிறந்த நீதிபதியால் மட்டுமே இதை நன்கு நிர்வகிக்க முடியும்" என்ற என் கருத்து, அவருக்கு பிடித்து போயிருக்கலாம் என்று எண்ணுகிறேன். வக்ப் வாரியம் திருத்தி அமைக்க பட்ட போது, அதன் தலைவராக வழக்கறிஞர் ரஸாக் அவர்கள் நியமனம் செய் யப்பட்டார். நாகர்கோவில் வந்த அவர், எனது மாமா இப்ராகீம் அவர்களின் வீட்டில், விருந்தி னராக தங்கியிருந்த போது, அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர், மறைந்த பி.எஸ.எ. ரஹ்மான் அவர்கள்......
Vavar F Habibullah

தொடரும்
---------------------------------------------------------------
புனித ஹஜ் பயணம் - சில உண்மைகள் (3)

சில உண்மைகள் சுடும்; சில வார்த்தைகளும் சுடும். அது சிலரை காயப்படுத்தவும் கூடும். ஊமையாக இருந்தால் ஏற்படும் அமைதியும் ஒரு சுகம் தான். சொல்லாத வார்த்தைகளின் விலையும் அதிகம்; மதிப்பும் அதிகம்.

எந்த ஒரு தனி மனித, அத்துமீறல்களையும் படம் பிடித்து காட்டுவது இந்த பதிவின் நோக்கம் அல்ல. 'மனித நேயம்' என்ற போர்வையில் ஒழிந்திருக்கும், சில சமுதாய காவலர்களை மக்கள் முன்னிலையில், அறிமுகம் செய்து வைப்பதும் இதன் நோக்கம் அல்ல. பொய்களே உண்மையின் வேடத்தில் நடிக்கும் போது - அதை கை தட்டி ரசிக்காதவனை, இந்த சமூகம் " இவன் நல்ல கலா ரசிகன் இல்லை" என்று முத்திரை குத்தி ஓரம் கட்டும் அவல நிலையிலேயே, 'சமூகம்' இன்றும் வாழ்கிறது. அராஜகம் கூட இங்கே ராஜ தந்திரம் என்று பெருமைப் படுத்தப் படுகிறது. 'கவிதைக்கு பொய் அழகு' என்பது போல், சில செயல்களும் பொய்களால் அலங்கரிக்கப் பட்டு கவர்ச்சிகரமாக சித்தரிக் கப்படுகின்றன.எனவே சில உண்மைகள் இங்கும் மூடி மறைக்கப் படும் என்ற உறுதி பாட்டோடு மேலும் தொடர ஆவல்....


 Vavar F Habibullah
தொடரும்
புனித ஹஜ் பயணம் - சில உண்மைகள்- Dr. Vavar F Habibu...

1 comment:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

தொடரட்டும்... இன்ஷா அல்லாஹ்...