பத்து மாதம் சுமந்தே என்னைப்
பரிவுடன் வளர்த்தவள் அன்னை
இத் தரை தன்னில் இவளருந் தியாகம்
எழுந்தே தொட்டிடும் விண்ணை...!
கண்ணே என்று இமையைப் போலவே
காத்திருபால் இவள் நிதமே
பொன்னே என்றும் பூவே என்றும்
பொழியும் அன்போர் விதமே...!
ஈயொடெறும்பு எதுவும் அணுகா(து)
இனிதாய் வளர்த்த உள்ளம்
தோயும் அன்புச் சுடராய் என்னைத்
துலங்க வைத்தாள்! உய்வோம்!
பள்ளிப் பாடம் சொல்லித் தந்தே
பான்பாய் அனுப்பி விடுவாள்
வெள்ளி பூத்தே விடியும் வானாய்
விளங்க அனைத்தும் இடுவாள்....!
பட்டம் பெற்றே பதவிகள் பெற்றுப்
பாரினில் துலங்க வைத்தாள்
தொட்டுப் பேசித் துணையாய் நிற்கும்
தூய உள்ளம் அன்னை....!
உதிரந் தன்னைப் பாலாய் உதிர்த்து
ஊட்டி வளர்த்தவள் அன்னை
இதயத் தரையில் வாழும் உள்ளம்
இவளை மறவேன் மண்ணில்....!
1 comment:
வாழ்த்துகள்மா...புதுகை வலைப்பதிவர் திருவிழா வரும் 11.10.15 அன்று நடக்க உள்ளது அவ்விழாவில் தங்களின் வருகையை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்..மேலும் வலைப்பதிவர் கையேடு தயாரிக்கப்பட உள்ளது அதில் 400 வலைப்பதிவர் விவரங்கள் தொகுக்கின்றோம்.வர இயலாத நிலையில் மின்னஞ்சலில் தங்கள் வலைக்குறிப்பை அனுப்பி வைக்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்..உங்களுக்கு தெரிந்த வலைப்பதிவர்களிடமும் இவ்விவரத்தைக்கூறி அனுப்பி வைப்பீர்கள் என நம்புகின்றேன்...பெண் பதிவர்கள் அதிகமாக கையேட்டில் இடம் பெற வேண்டும் என்பது என் ஆவல்..www.bloggersmeet2015.blogspot.com.மேலும் விவரங்கள் இந்த வலைப்பூவில்...காணுங்களேன்
Post a Comment