Friday, September 4, 2015

புனிதம் மணக்கும் ஹஜ் ..! / சிறப்புக் கவிதை - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

உலகில் வாழும் முஸ்லிம் மக்கள் பலர் ஹஜ்ஜுக் கடமையினை நிறை வேறற புனித மக்கா நகர் சென்று இருக்கம் இந்த இனிமையான மாதத்தின் சிறப்புக் கவிதை

புனிதம் மணக்கும் ஹஜ் ..!
மண்ணுலக வாழ்வில் முஸ்லிம் ,
மாந்தரைப் புனிதம் பண்ணும்
புண்ணியம் ஹஜ்ஜுக்கு குண்டு
புரிந்தவர் கின்பம் உண்டு ..!

பாவத்தை யகற்றி நெஞ்சை
பாலென மாற்றும் ஹஜ்ஜை !
தாபமாய் தரிசித் தோர்கள்
தரனியில் ஹாஜி யாவர் !

இஸ்மாயில் நபி செய்த
இணையிலா தியாகந் தன்னை
புஸ்பமாய் மணக்கக் கண்டு
பூரிப்பார் ஹஜ்ஜில் தானே !

சத்தியம் வாழ்வில் கண்டு
சந்ததி தழைக்கச் செய்து
நித்திய இன்பம் தந்து
நிலைப்பது ஹஜ் நன் நாளே

ஆடைகளை புதிதாய் பூண்டு
அகந்தனில் மகிழ்ச்சி பூண்டு
வாழுவோர்க் கருளும் நெஞ்சை
வழங்கிடும் ஹஜ் நன் நாளே !

ஸம் ஸம் தண்ணீரை மாற்றி
தவச் சுகம் தன்னில் நீந்தி
இம்சையே இல்லா வாழ்வில்
ஈ ந்திடும் ஹஜ்ஜே வாழி ..!


கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை

No comments: