தமிழகத்தில், எம்.ஜி.ஆர் ஆட்சி நடை பெற்ற கால கட்டத்தில், தமிழ்நாடு அரசு ஹஜ் கமிட் டியில் என்னை உறுப்பினராக நியமனம் செய்து எம்.ஜி.ஆர் உத்தரவு பிறப்பித்தார். அந்த செய்தியை அந்நாளில் அதிகார பூர்வமாக அறிவித்தவர், மூத்த IAS அதிகாரி யும், தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் செயலாள ருமான E. அகமது IAS அவர்கள்.
எம்.ஜி.ஆர் ஆட்சியிலும் சரி; பின் வந்த ஜானகி ஆட்சியிலும் சரி, ஆட்சி கலைந்த பின் நிகழ்ந்த, ஜனாதிபதி ஆட்சியிலும் சரி, தொடர்ந்து வந்த கலைஞர் ஆட்சியிலும் சரி, மிக நீண்ட காலம், தமிழ்நாடு ஹஜ் குழுவில் உறுப்பினராக பணிபுரிந்த அனுபவம் எனக்கு உண்டு.
கலைஞர் ஆட்சியிலும் என்னை உறுப்பினராக தொடர, அன்றைய அமைச்சர் மறைந்த, சாதிக் பாட்சா அவர்கள் மிகவும் விரும்பி அழைத்தார்கள். என்றாலும், அவர் தலைமை வகித்த ஹஜ் கமிட்டி கூட்டத்தில் கலந்து விட்டு, மரியாதை நிமித்தமாக எனது ராஜினாமா கடிதத்தையும் முறைப்படி சமர்ப் பித்து விட்டு வெளியேறியவன...நான் - ஒருவ னாக மட்டுமே இருக்க முடியும் என்று, மிகவும் உறுதியாக நம்புகிறேன்.
அந்த நாட்களில், என்னுடன் இணைந்து பணியாற்றியவர்களில் மிகவும் குறிப்பிடத் தக்கவர், ஆர்காடு இளவரசர் - நவாப் முகமது அலி அவர்கள். ஒரு MLA மற்றும் ஒரு MP யும், குழுவில் இருந்ததாக ஞாபகம். இந்த பதவிகளை பெற, இப்போது லட்சக்கணக்கில் பணம் செலவு செய்கிறார்கள் என்பதை கேட் கும் போது, மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
ராஜினாமா கடிதம் கொடுத்ததை சொல்லும் போது இன்னொரு ராஜினாமா நிகழ்ச்சியும் நினைவில் வந்து போகிறது.
அந்த நாட்களில், வக்ப் வாரியம் ஒழுங்காக செயல் படவில்லை. உறுப்பினர்கள், ஊழல் செய்வதில் திறமைசாலிகள்- என்ற விபரத்தை MGR - டம், இண்டலிஜென்ஸ் துறை, மிகவும் ஆதாரத்துடன் நிரூபித்து விட்டது. அந்த நாட் களில், தமிழக இண்டலிஜென்ஸ் துறை தலை வராக இருந்த, DGP மோகன் தாஸ் மிகவும் நேர்மையான IPS அதிகாரி. இவரை கண்டால் அந்த நாட்களில், அமைச்சர்களே பயந்து நடுங்குவர். இவரது "சீக்ரெட் ரிப்போர்ட்" அன்றைய உண்மைகளை பிரதிபலித்ததே, MGR இவரை மிகவும் மதிக்க காரணமாக அமைந்தது.
வக்ப் வாரியத்தில் நடக்கும் ஊழல்களை வெளிக் கொணர்வதறகாக, 'வக்ப் வாரிய விசாரணைக் குழு' - ஒன்றை MGR ஏற்படுத்தி னார். அந்த குழுவிலும், என்னை உறுப்பினராக நியமித்து MGR ஆணை பிறப் பித்தார்.வேண்டா வெறுப்பாகவே, அந்த பதவி யை, நான் ஏற்றுக் கொண்டேன். வக்ப் வாரியம் ஊழலின் சிகரம் என்பதை நேரடியாக தெரிந்து கொள்ளும் அரிய வாய்ப்பினை, இதன் மூலம் நான் பெற்றேன். தர்காக்களை, மசூதிகளை நிர்வகிக்கும், இந்த பெரிய மனிதர்களின், சீர்கெட்ட செயல்கள், இளைஞ னான என்னை, அந்நாட்களில் மிகவும் வேத னை படுத்தியதுண்டு. அவர்களின் பலரது வேண்டுகோள்களுக்கு, என்னால் செவி சாய்க்க இயலவில்லை. இந்த பதவிக்கு முற்றிலும் தகுதியில்லாதவன் - 'நான்' என்பதை உணர, எனக்கு அதிக நாட்கள் ஆகவில்லை. ஒரு முடிவோடு சென்னை சென்ற நான், MGR அவர்களை நேரில் சந்தித்து, 'வக்ப் வாரிய விசாரணைக்குழு' உறுப்பினர் பதவிக்கான ராஜினாமா கடித்தை சமர்ப்பித்தேன். MGR காரணம் கேட்டார், நான் சொல்ல துவங்கினேன்......
தொடரும்.....
1 comment:
நன்றி தகவலுக்கு...
பகுதி 2 எப்போங்க?
Post a Comment