பாலியல் வன்முறைகள் நிகழக்கூடாது,
கடுமையான தண்டனைகளும் வழங்கலாகாது,
ஆடை ஒழுங்கை ஆதரிக்கவும் கூடாது
அப்ப என்னதான் பண்றது...???
எல்லா மனிதர்கள் மனதிலும் பக்குவத்தை விதைக்க வேண்டும்
என்பது சரிதான்,ஆனால் உடனடியாக நடக்குமா அது...??
பத்திரிகைகளும்,தொலைக்காட்சிகளும், நாடகம்,திரைப்படம்,விளம்பரம் மற்றும் சினிமாக்கள் மூலம் உருவாக்கி வைத்திருக்கும் பெண்ணுடல் சார்ந்த கேவலமான புரிதல்களை மாற்றுவதற்கு என்ன உழைத்திருக்கிறோம்...???
#எதுவுமே செய்ய மாட்டோம்,ஆனால் எல்லாம் மாற வேண்டுமா...???
-------------------------
சகமனுஷியை ஒரு இச்சையைப் பூர்த்தி செய்யும் சாதனமாக மட்டுமே பார்க்கும் மனொநிலைப் பிறழ்வுகளை மாற்றியமைக்க வேண்டும்.
நிரந்தரமான மற்றும் நீண்டகாலத் தீர்வு என்பது மக்களின் பொதுப்புத்தியில் அறம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்,
சுய ஒழுக்கம் உள்ள தலைமுறையை உருவாக்குவதும்தான்...
- ஆனால் அதற்கு கடினமான முயற்சியும் மிகநீண்ட செயல்திட்டமும் தேவை.
தண்டனை மூலம் பயம்காட்டி குற்றங்களைக் குறைக்க முயல்வது உடனடித் தீர்வு...!!
ஒட்டுமொத்த ஆணினத்தை குறைசொல்லிக் குற்றம் சாட்டுவது என்பது
ஒரு அறிவார்ந்த சமூகத் தீர்வாக இருக்காது;தப்பித்தலாகவே இருக்கும்..!!
Nisha Mansur
No comments:
Post a Comment