Monday, October 26, 2020

திருமணத்தை அரசாங்கத்தில் பதிவு செய்து கொள்வதில் முஸ்லிம் சமூகத்தவர்கள் மெத்தனம் காட்டக்கூடாது.

 


திருமணத்தை அரசாங்கத்தில் பதிவு செய்து கொள்வதில் முஸ்லிம் சமூகத்தவர்கள் மெத்தனம் காட்டக்கூடாது.

முஹல்லா / ஜமாஅத்களில் திருமணம் முடிந்த 3 மாதத்திற்குள் பதிவாளர் அலுவலகம் சென்று அரசு ஏட்டிலும் பதிவு செய்து சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது விதி.

3 மாதம் கழித்து சென்றால் உடனடியாக நமது விண்ணப்பத்தை ஏற்க மாட்டார்கள், மாறாக அதை அலுவலக விளம்பரப் பலகையில் ஒரு மாத காலம் பொது மக்கள் பார்வைக்காக இட்டு வைப்பார்கள்.

யாரும் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை என்பதை உறுதி செய்த பின்னரே பதிவு செய்வார்கள்.இது தான் மரபாக பின்பற்றப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நாகர்கோவில் சார் பதிவாளர் அலுவலக பலகையிலும் 8 விண்ணப்பங்கள் பொது மக்கள் பார்வைக்காக இடப்பட்டிருந்தன, அவற்றில் 6 விண்ணப்பங்கள் முஸ்லிம்களுடையது !!

இதை கண்ட பின்பு தான் தெரிந்தது, நாம் இதில் அதிக கவனம் செலுத்துவதில்லை என்று !

மற்ற சமூகத்தவர் போல் நாமும் திருமணம் முடிந்த கையோடு அரசு ஏட்டிலும் பதிவு செய்து கொண்டால் இது போன்று பொது மக்கள் பார்வைக்கு நமது புகைப்படங்கள் வைக்கப்படும் தர்மசங்கடத்திலிருந்து தவிர்ந்து கொள்ளலாம் ,

ஏனைய பல சவுகரியங்களும் அதனால் இருக்கின்றன என்பதையும் நாம் கருத்தில் கொள்வோம் !!

தகவல்  : நாசித் அஹ்மத் 

படம்.     : google

No comments: