அறியாமை இருள் சூழ்ந்த அரபகத்து பாலையிலே
பாடியவர் - காவியக்குரலோன் தேரிழந்தூர் தாஜுத்தீன் ஃபைஜி
பாடல் வரிகள்
காயல் யஹ்யா முஹிய்யத்தீன்
இசை - முரளிதரன்
___________
அறியாமை இருள் சூழ்ந்த அரபகத்து பாலையிலே
அறிவென்னும் நிலவாக அடிவானில் உதித்தனரே.....
அறிவுக்கண் திறந்தார்....அறியாமை ஒழித்தார்
ஏற்றவர் வென்றார் ...இகழ்ந்தவர் தோற்றார்
மறக்குமோ நெஞ்சம்... எம்மாநபியை.... ஆ...ஆ...ஆ...
பாலையில் பிறந்தவராம் - நபி அதி
காலையின் பகலவனாம் - நபி அதி
காலையின் பகலவனாம்...
சோலையில் வீசும் தென்றலை போலே
சொர்க்கத்தின் நாயகராம் – (பாலையில்)
ஏழையாய் பிறந்தவராம் - வாழ்வில் எளிமையை ரசித்தவராம் ஆ...ஆ...ஆ...
ஏழையாய் பிறந்தவராம் - வாழ்வில் எளிமையை ரசித்தவராம்
செல்வங்கள் தேடி வந்திட்டபோதும்
ஏற்றிட மறுத்தவராம்
செல்வங்கள் தேடி வந்திட்டபோதும்
ஏற்றிட மறுத்தவராம் - (பாலையில்)
உள்ளத்தில் ஈமான் விதைத்தவராம் - இந்த
உலகினில் புரட்சியை விதைத்தவராம்
வெல்லம்போ லினிக்கும் வார்த்தைகளாலே
வேதத்தின் வரிகளை சொன்னவராம் (பாலையில்)
இறைவனின் தியானத்தில் இருந்தவராம் - பல
இரவுகள் மலைமேல் தனித்தவராம்
மறை குர்ஆனை மனதினில் ஏந்தி
மாந்தர்கள் பயன் பெற அளித்தவராம் (பாலையில்)
இருபத்து ஐந்தாம் வயதினிலே - நல்
இல்லறம் கண்டு மகிழ்ந்தவராம்
அறுபத்து மூன்று ஆண்டுகள் வாழ்ந்து
அகிலத்தின் ஒளியாய் சிறந்தவராம் (பாலையில்)
நிலவை இரண்டாய் பிளந்தவராம் - விரல்
இடுக்கில் நீரை அளித்தவராம்
அலியார் அசரு தொழுகைக்காக
அடைந்த சூரியன் அழைத்தவராம் (பாலையில்)
No comments:
Post a Comment