கமலுக்கு பின்னால்
ஒளிந்திருக்கும் ஹாசன்?
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம் கமல்ஹாசன் அவரின் சகோதரர்கள் சந்திரஹாசன், சாருஹாசன் ஆகியோர் பெயருக்கு பின்னால் இருக்கும் #ஹாசன் ஒரு இஸ்லாமியர்..
யாகூப் ஹாசன் சேட்
நாக்பூரில் பிறந்து சென்னை மாகாணத்தின் அரசியல் பிரபலமாக விளங்கியவர்..
முஸ்லீம் லீக் துவங்கிய ஆரம்ப காலத்தில் சென்னை மாநகராட்சி உறுப்பினராகவும், 1916- 19 வரை சென்னை மாகாண மேலவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர்..
பிற்காலத்தில் காங்கிரசில் இணைந்த யாகூப் ஹாசன், ராஜாஜி தலைமையில் சென்னை மாகாணத்தின் முதல் முஸ்லீம் அமைச்சர் எனும் அந்தஸ்துடன் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் பதவி வகித்த பெருமைக்குரியவர்..
இந்திய விடுதலைப் போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திய யாகூப் ஹாசன், தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் நடைபெற்ற கிலாபத் போராட்டத்தில் கலந்து கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்த காரணமாக பிற்காலத்தில் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தவர்..
கமல் சகோதரர்களின் தந்தை ஸ்ரீநிவாஸன், இவரும் சுதந்திர போராட்டங்களில் பங்கெடுத்தவர்.
ஒரு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட ஸ்ரீநிவாஸன், யாகூப் ஹாசன் அடைக்கப்பட்டிருந்த சிறையில் ஒரே அறையில் இருந்ததால் இருவருக்கும் நட்பு ஏற்பட்டது..
சிறை கைதிகளுக்கு இடையே ஒருமுறை ஏற்பட்ட மோதலில் ஸ்ரீநிவாஸன் அவர்களை யாகூப் ஹாசன் காப்பாற்றிய காரணம் இருவருக்குமிடையே நட்பு ஆழமானது...
யாகூப் ஹாசனுடன் ஏற்பட்ட நட்புக்கு பிரதிபலனாக தனது ஆண் பிள்ளைகளின் பெயருக்கு பின்னால் ஹாசன் சேர்த்து சந்திராஹாசன், சாருஹாசன், கமல்ஹாசன் என்று தங்களது தந்தை ஸ்ரீநிவாஸன் பெயரிட்டதாக ஒரு பேட்டியில் சாருஹாசன் நினைவு கூர்ந்தார்..
No comments:
Post a Comment