அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் Mohamed Rafiudeen
உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.சிறந்த ,மனிதநேயம் பெற்ற மிக சிறந்தவர்கள் வரிசையில் Mohamed Rafiudeen ஒருவர்! "
சிறு வயதிலேயே எழுத்தில் ஆர்வம் அதன் தொடர்ச்சி அவரது முகநூல் பதிவுகள்
நான் இளங்கலை படிப்பில் அரசியல் படித்தேன்
சட்டப் படிப்பு படித்து பட்டம் வாங்கினேன்
அரசியல் நண்பர்கள் அநேகம்
அரசியல் பேசுவதில்லை
அரசியல் பற்றி எழுதுவதுமில்லை
அரசியல் பற்றி எழுத மற்றும் பேச
இக்கால அரசியல் அறிய வேண்டும்
அரசியல் பற்றி வரும் செய்திகள் மாறுபட்டிருகின்றது
இங்கு இருந்தவர் அங்கு போகிறார்
இங்கு இருந்தபோது ஒன்று சொல்கிறார்
அங்கு போய் மாற்றுக் கருத்து சொல்கிறார்
அரசியல் நிலை பற்றி ஒரு செய்தித்தாள் ஒன்று சொல்கின்றது
அரசியல் நிலை பற்றி மற்றொரு செய்தித்தாள் அதே நிகழ்வை மாற்றிச் சொல்கின்றது
அரசியல் பற்றி பேச அரசியலில் இருக்க வேண்டும்
அரசியல் பற்றி பேசினால் சிறைக் கதவு திறந்திருக்கும்
முழு அதிகாரம் பெற்ற அதிகாரம் முழுசாக விழுங்குகிறது
அனைத்து அதிகாரமும் விழுங்கவே செய்கின்றது
"All power tends to corrupt and absolute power corrupts absolutely."
உங்களை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள், ஏனென்றால் வேறு யாரும் அதனைச் செய்யவில்லை
நான் கவலைப்படாததால் எனக்கு புரியவில்லை என்று அர்த்தமல்ல
இந்தியாவின் அரசியல் நாட்டின் அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள் செயல்படுகிறது. இந்தியா ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற ஜனநாயக குடியரசு ஆகும், இதில் இந்திய ஜனாதிபதி மாநிலத் தலைவராகவும், இந்தியப் பிரதமர் அரசாங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார்.
"ஒங்க வாழ்க்கைல மறக்க முடியாத நண்பர்கள்னு ஒரு பத்து பேர் சொல்லுங்க அப்டின்னா நான் சொல்ற பத்து பேர்ல எட்டு பேர் முகநூல் நட்பாகத்தான் இருக்கும்! என்னை என் குறைகளோடு அல்லது குறைகளை தெரிஞ்சிக்க வேண்டிய அவசியமில்லைன்னு நெனைச்சி என் இயல்பை காயப்படுத்தாம நட்போடு இருக்கறவங்க இவங்கதான்! இவங்கதான்னா அதுல நீங்களும் உண்டு Mohamed Rafiudeen
அதாவது அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு
அந்த ரெண்டாவது வரிக்கு ஓனர் இவரு! நான் நேரில் சந்தித்த முகநூல் நட்புகள் அன்பை மட்டுமே தந்தவர்கள் பாசத்தை காட்டிய மிக சிறந்தவர்கள் வரிசையில் Mohamed Rafiudeen ஒருவர்! "
பாமர மக்களை வேடிக்கை காட்டி அவர்களை தங்கள் பக்கம் ஈர்ப்பது என்பது ஒருமுறை
அதைவிட சிறப்பாக தற்கால அரசியலை நகைச்சுவையாக கிண்டல் அல்லது கேலி செய்து அரசியலை அறிய வைப்பது ஒரு சிறப்பு. அதனை சிறப்பாக எழுதி பல மக்களை தனது முகநூல் பக்கதில் மிக சிறந்தவர்கள் வரிசையில் கொடிகட்டிப் பறப்பவர் பரப்புபவர் நண்பர் Mohamed Rafiudeen அவர்கள்
இன்றைய இளைய தலைமுறை அதிகமாக சிந்திக்க தலைப்பட்டதன் விளைவே இந்த அறிவியல் புரட்சி.
அதற்கு ஆக்கமும் ஊக்கமும் தருபவர் நண்பர் Mohamed Rafiudeen அவர்கள்
அரசியல் வேண்டாம் அது பிரச்சனையாகும் என்ற மனோநிலையை மாற்ற முயல்கின்றார் நண்பர்
Mohamed Rafiudeen
அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)
'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்
நம்மைப்பற்றி நாம் அறிவோம்
நம்மை வாழ்வித்தவர்களை
நமக்கு கல்வி கொடுப்பவகளை
நம் உறவுகளை
நம் நண்பர்களை
நன்கு அறிந்து கொள்வதில்
நமக்கு மிகவும் மகிழ்வும் ,பலனும் .பலமும் ,உந்துதல் சக்தியும் கிடைக்கும்
Mohamed Rafiudeen அவர்கள் கொல்லாபுரத்தில் பிறந்து Works at Vendeur
Studied at Jamal Mohamed College, Trichy, India
Went to Jamal Mohamed College
Lives in Paris, France
Mohamed Rafiudeen அவர்களை வாழ்த்தி மகிழ்வதில் நாம் மகிழ்வடைகின்றோம் .
இறைவன் அருளால் தொடரட்டும் இவரது சேவைகள் .
இறைவன் அவருக்கு நீடித்த ஆயூளை கொடுத்து அருள இறைவனை பிரார்திக்கின்றோம்
Jazaakum'Allah Khairan.
நன்றி
அன்புடன் ,
பல்சுவை உணவை பாங்குடன் பகிர்ந்து மகிழ்வித்த உமது Mohamed Rafiudeen
அன்புடன்
அ.முகம்மது அலி ஜின்னா
No comments:
Post a Comment