செப்டம்பர் 5 அன்று, கவிஞர் மு. மேத்தா பெயரில்
மு.மேத்தா அறக்கட்டளை சென்னை புதுக்கல்லூரியில் தமிழ்த்துறையில் தொடங்கப்படுகின்றது.
சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை ரூபாய் 5 லட்சம் நிதி அளித்து உள்ளது.
அனைத்து கல்லூரி இளங்கலை முதுகலை மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கவிதை-கட்டுரை-சிறுகதை என சுழற்சி முறையில் போட்டி நடத்தி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் பரிசும், நூலும் வெளியிடப்படும். அத்தோடு புதுக்கல்லூரி தமிழ்த்துறை மு.மேத்தா விருதும் அளித்து கவுரவப்படுத்தும்.
Musthafa Mohamed M A
மெல்லத் தமிழினி வாழும்! உள்ளங்களை ஆளும்!!
-----------------------------------------------------------------------------------------------இப்படி ஓர் இன்ப அதிர்ச்சி தரும் செய்தியை பலரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்- (சில நாட்களுக்கு முன்பு வரை நானும்தான்.)
முன்னதாக என் மனதில் தோன்றிய சில நினைவுகளை இங்கே்குறிப்பிட வேண்டும்.
.
பிறரைத் தகுதியறிந்து பாராட்ட,கொண்டாடத் தனி மனம் வேண்டும். தமிழுலகின் பொதுவான ஒரு மரபு, ஒருவர் காலமான பிறகுதான் கொண்டாடப்படுவார் என்பதே.
.
நாம் வாழும் காலத்தில் நம்மை யாரும் கொண்டாடவில்லையே என்ற வருத்தமும் கோபமும் புகழ்பெற்ற எழுத்தாளர் புதுமைப் பித்தனுக்கு இருந்தது.அவர் அதை இப்படிப் பதிவு செய்து வைத்துள்ளார்:-
“ …. இத்தனைக்கும் பிறகு
இனி ஒன்று;ஐயா நான்
செத்ததற்குப் பிறகு
சிலைகள் வைக்காதீர்.
வானத்து அமரன் வந்தான் காண்
வந்ததுபோல்
போனான் காண் என்று
புலம்பாதீர் …”
அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றும் ஓர் இளவல், மறைக்கப்பட்ட,காலம் சென்ற பல ஆளுமைகளைப் பற்றித் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்ற விவரங்களைக் கூறினார்; அவர்களில் விடுபட்ட ஆளுமைகள் இருந்தால் கூறுங்கள் என்றார். சொல்கிறேன் என்ற நான், ”உயிரோடு இருக்கும் ஆளுமைகளைப் பற்றியும் இப்படிச் செய்தால் அவர்கள் மேலும் ஆர்வத்தோடு பணியாற்றுவார்களே?” என்று கேட்டேன். சற்றும் தயங்காமல் அவர்,”அதற்கு வாய்ப்பில்லை’ என்றார்
இதுதான் பொதுவான தமிழ்ச் சூழல். விதிவிலக்காகப் பேரறிஞர் அண்ணா,புரட்சிக் கவிஞர் பாரதிதாசனைக் கொண்டாடியதைக் கூறலாம்.
அண்மை ஆண்டுகளில் வாழும் ஆளுமைகளைக் கொண்டாடுவதில் ஒரு புதிய பாதையை வகுத்த புகழ் தமிழ்த்திரு சிங்கப்பூர் முஸ்தஃபா அவர்களைச் சேரும்.
அன்று கவிக்கோ அவர்கள் வாழும்போதே கவிக்கோ மன்றம் கண்டார்.இதோ எதிர்வரும் செப்டம்பரில் வாழும் கவிவேந்தர் மு.மேத்தா அவர்களின் பெயரில் அறக்கட்டளை தொடங்குகிறார்….
இத்தகைய அருந்தமிழ் பணியை,தமிழ்கூறும் நல்லுலகு வரவேற்கும்,வாழ்த்தும் என்பது நம் நன்னம்பிக்கை....
மெல்லத் தமிழினி வாழும்! உள்ளங்களை ஆளும்!!
Yembal Thajammul Mohammad
No comments:
Post a Comment