Monday, August 19, 2019

அந்த நாள்...! ஆனந்த திருநாள்!!

Dr.Vavar F Habibullah
காதல் - திருமணம்
இது பற்றி ஒரு முறை
கேள்வி கேட்ட போது
கிரேக்க தத்துவ மேதை
சாக்ரடீஸ் சொன்னான்...

வாழ்வில்...
மனிதன், தான்
விரும்பியது கிடைக்காத
போதும் மனம் வருந்துகிறான்!
விரும்பாதது கிடைக்கும்
போதும் மனம் வருந்துகிறான்!!
விரும்பியதே கிடைத்த
போதும் மனம் வருந்துகிறான்!!!

கிடைத்ததை முழு மனதுடன்
விரும்புவதே வாழ்வில்
மகிழ்ச்சி தர உதவும்
மாமருந்தாகும்.

சாலை சுமை தாங்கி... போல்
வாழ்வில் இந்நாள் வரை எனை
தாங்கி பிடித்த எங்கள் வீட்டு
இல்லத்தரசிக்கு நன்றி...நன்றி!
ஆம்...ஆயிரம் நன்றிகள் உரித்து!!






Dr.Vavar F Habibullah










=============================================

Raheemullah Mohamed Vavar நான் பதிவேற்றி இருக்கும் இந்த படம் உன் நெஞ்சுக் கூட்டுக்குள் உதிரத்தால் வரையப்பட்டிருக்கும் ஒரு படம் !!!

Abu Haashima Raheemullah Mohamed Vavar
காலையிலேயே பார்த்து
மனமும் கண்களும் கலங்கி
பத்திரப்படுத்தி விட்டேன்.
அது படமல்ல
உயிர் சித்திரம்.


Raheemullah Mohamed Vavar பெற்ற தாய்... உம்மா, அம்மா, சீதேவி, மகராசி, கண்கள் குளமாகி கல்பில் ஏக்கம், அல்லாஹ் அளித்தஅளப்பரிய பரிசில் நிறைவாய் இருக்கும் நிறைமாதரசி !

Abu Haashima
Abu Haashima Raheemullah Mohamed Vavar
சுவனத்தின் சிறப்பான
வளவாழ்வை
உம்மா வாப்பா
இருவருக்கும் இறைவன்
தந்தருள்வானாக.

No comments: