Samsul Hameed Saleem Mohamed
சிரிப்பும் அழுகையும்
சந்தோசமும் சோகமும்
பிறப்பும் இறப்பும்
எல்லாமும் நிறைவாய்
கலந்ததே வாழ்க்கை!
காலம் சிலதை
நினைவூட்டும்
அந்த காலமே சிலதை
மறக்கடிக்கும்!
மறதி என்கிற
ஒன்றில்லாது போனால்
நினைவு என்கிற
ஒன்றின் பலனே
என்னவென்று
தெரியாது போயிருக்கும்!
நினைவு என்கிற
ஒன்றின் எதிர்ப்பதமாய்
மறதி இருக்கலாம்
ஆனால் மறதி என்கிற
ஒன்றில்லாது
போயிருந்தால் மனிதன்
இருக்கமாட்டான்!
சில நினைவுகள்
சங்கீதமாய் நம் காதினில்
ஒலிக்கும்! ஆயினும்
மறதி என்பது எப்போதும்
நம்மிடம் பாக்கியமாய்
இருக்கும்!
நமக்கு ஏற்படும்
எல்லா இழப்பிற்கும்
துன்பத்திற்கும்
மறதியைப்போல
ஒரு மாமருந்தில்லை!
No comments:
Post a Comment