நான் வசிக்கும் உகாண்டாவின் பக்கத்து நாடு காங்கோ. இயற்கையின் அத்தனை அழகையும் செல்வங்களையும் அளக்காமல் அள்ளி வழங்கி இருக்கிறான் இறைவன்.
உலகின் மொத்த கனிம வளத்தில் அதிகமும் இங்கிருப்பதாக தகவல்.
ஏன், ஜப்பானில் அமேரிக்கா வெடித்த அனுகுண்டி ற்கு தேவைப்பட்ட கனிமத் தாதுவும் காங்கோவின் லுமும்பாஷி எனும் நகரின் அருகே இருக்கும் சுரங்கத்தில் இருந்து எடுக்கப் பட்டது.
அத்தனையும் இருந்தும் ...... இருந்தும் அந்நாட்டு குடிமக்கள் ஏழைகளாகவே வைக்கப் பட்டுள்ளனர்.
அந்நிய ஆதிக்கம் முடிந்து விட்டாலும் புவிசார் அரசியல் ஜியோபோலிடிக்ஸ் தாண்டவமாடும் ஆதிக்க சக்திகளின் களமாகவே இன்றும் இருக்கிறது.
இது கண்கூடாக நான் காண்பது. உலகெங்கும் கனிமங்களை சுரண்டும் ஆதிக்க சக்திகளின் அசுரவளர்ச்சி மனித இனத்தின் அழிவிற்கே வழிவகுக்கிறது.
நம்நாட்டில் மட்டும் என்ன நடக்கிறதாம் ?
பண்டுதொட்டே,
வடக்கு வாழ்கிறது
தெற்கு தேய்கிறது என்னும் கூப்பாடு ஒலித்துக்கொண்டேதானே இருக்கிறது ?
நாளைய உலகில் என்ன நடக்கும் ? யாரறிவாரோ ?
நல்லதே நடக்க பிரார்த்திப்போம்.
எண்ண ஓட்டம் ....!
No comments:
Post a Comment