Yasar Arafat
மசக்கை என்றதும் முதலில் பறந்தாய்;
பின்புதான் தரையில் நடந்தாய்;
உண்டபின் குமட்டிக்கொண்டிருப்பாய்
ஆனாலும் எனக்காகதான் உண்டுக்கொண்டிருப்பாய்;
மெல்லமாய் நடப்பாய்;
ஒருக்கழித்துதான் படுப்பாய்;
உன் அழகெல்லாம் குலைந்திருக்கும்;
ஆனாலும் முகமெல்லாம் பூரித்திருக்கும்;
உயிர்போகும் வலியென்று உனக்கும் தெரியும்;
உயிர்வர போகுதென்ற மகிழ்வு உனக்கு மட்டுமே புரியும்;
அழுது கதறி மாய்ந்தப்பின் முதலில்
எனைதான் பார்த்தாய்..
நான் அழும்போதெல்லாம் பால் கொடுக்க
அதற்கென்றே தேர்வான ஆடையே அணிந்தாய்;
என் பாஷை உனக்கு மட்டுமே விளங்கும்;
எனக்கேதும் ஆனால் உன் கண்கள் கலங்கும்;
மொழியில் இல்லாத ...ஜுஜுஜு ..
தாலாட்டினால்தான் நான் தூங்குவதாய் நினைப்பாய்;
உன் முகம் பார்த்துக்கொண்டே
உறக்கத்திலே கிடப்பேன் களிப்பாய்...!
#அது_அப்படித்தான்...
Yasar Arafat
No comments:
Post a Comment