புன்னகையை சமைக்கிறது ....
அகப் புத்தகமது
அன்பை அச்சிடுகிறது ....
கற்பனை ஓலையது
எண்ணங்களை முடைகிறது ....
விற்பனை ஆலையது
உழைப்பை குடைகிறது ....
பறித்த பூக்களதில்
வாசமும் விரிகிறது ....
குறித்த நொடியதில்
சுவாசமும் பிரிகிறது ....
மடியமர்ந்த மழலையது
பாசத்தோடு சிரிக்கிறது ....
கொடியமர்ந்த மல்லிகையது
மொட்டுகளை விரிக்கிறது ....
பயிர்கள் கருகியதும்
வறட்சியது நிலவுகிறது ....
வானம் உருகியதும்
மழையது பொழிகிறது ....
ஞானம் பெருகியதும்
சிந்தனையது பயணிக்கிறது ....
தானம் வழங்கியதும்
கருணையது கனிகிறது ....
கானம் ஒலித்ததும்
ராகமது இனிக்கிறது ....
கனவுறும் மனமது
காட்சியோடு உறங்குகிறது ...
தேனுறுஞ்சும் வண்டது
சுவையருந்தி கிறங்குகிறது ....
வானுயரும் பறவையது
சிறகடித்து களைக்கிறது ....
இறையெழுதும் தீர்ப்பது
மறுமையில் விதியாகிறது ....
அப்துல் கபூர்
No comments:
Post a Comment