'மோடி போல் உலகை சுற்றி வரவும்
ராகுல் காந்தி போல் குழந்தை தனத்துடனும்
ஸ்டாலின் போல் பொறுமையுடனும்
பன்னீர் செல்வம் போல் அதிர்ஷ்டம் பெறவும்
சின்னம்மா போல் செல்வம் குவிக்கவும்
சுஸ்மிதா சுவராஜ் போல் பீடு நடை போடவும்
விஜயகாந்த் போல் சிரிப்பு காட்டவும்
அன்பு மணி போல் லட்சியத்தை எட்டவும்
கலைஞர் போல் நீடுழி வாழவும்
இந்த புத்தாண்டில் நெஞ்சார வாழ்த்துகிறேன்.'
இந்த வாழ்த்து செய்தியை எனக்கு
அனுப்பியவர் எனது மரியாதைக்குரிய மெடிக்கல் டைரக்டர் டாக்டர் சுதா பொன்னு அவர்கள்.
ஒரு காலத்தில்..
'பெர்சனாலடி டெவலவப்மெண்ட்' பயிலரங்க நிகழ்ச்சிகளை இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் அதிக அளவில் நடத்திய அநுபவம் எனக்கு நிறைய உண்டு.
'தலைவர்கள் பிறக்கிறார்களா அல்லது
உருவாக்கப்படுகிறார்களா' என்ற கோட்பாட்டின் அடிப்படையிலும் எனது பயிலரங்கங்களில் சில சோதனைப் பயிற்சிகள் மேற் கொள்ளப் படும்.
இந்த பயிற்சி வகுப்புகள் நமது நாட்டை
பொறுத்த வரை எந்த வித பயனையும்
விளைவிக்க போவதில்லை என்பதை அநுபவ ரீதியாக உணர்ந்த பின்னர், அதிக வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தும் இந்த துறையை விட்டு முழுமையாக நான் விலகினேன்.
'என்ன தெரியும் என்பது முக்கியம் அல்ல..
யாரைத் தெரியும்' என்பதை வைத்தே தனி மனித வெற்றிகள் இங்கே நிர்ணயம் செய்யப படுகின்றன.
கல்வி திறமைகள் எல்லாம் பயனற்று போய் விசுவாசம் என்பது அதீத பயனைத் தருகிறது.
காலில் விழுந்து வணங்கும் கலாச்சாரமே பதவி பெறவும் வாழ்வில் உயரவும் வழி செய்கிறது. துதிபாடலும் வாழ்த்து கோஷங்களுமே தலைவர்கள் உருவாக வழி செய்கிறது.
மீடியாக்கள் தரும் பட்டி மன்றங்களே புதிய கீழ் மட்ட தலைவர்கள் அதிகம் உருவாக வழி அமைத்து கொடுக்கின்றன.சில ஓநாய்கள்
சாதுக்கள் வடிவில் அரங்கேறி சாதாரண்
செம்மறி ஆட்டு கூட்டத்தை வசப்படுத்தி தன் பசியை தீர்த்து மகிழ்கின்றன.
இந்திய திருநாட்டில் உயர்ந்த படிப்புகளால் இனி எந்த பயனும் இல்லை.பள்ளி படிப்புகள் பெஞ்சை துடைக்கின்றன.கல்லூரி படிப்புகள் இப்போதும் காபி தான் ஆற்றுகின்றன.புத்தக படிப்புக்களால் இனி எந்த பயனும் விளையப் போவதில்லை.
நம் நாட்டில் படித்தால் பாடம் நடத்தலாம்... படிக்காவிட்டால் கல்லூரி நடத்தலாம்.
டீ ஆற்றினால் பிரதமர் ஆகலாம்.டீக் கடை வைத்தால் முதல்வர் ஆகலாம்.காலில் விழுந்தால் அமைச்சராகலாம். ஜே போட்டால் கட்சி பிரமுகர் ஆகலாம்.பெரிய காரில் தன் தலைவன் போட்டோ வைத்தால் கட்சி VIP
பிரமுகர் ஆகலாம்.
ரெட்டிகளை ராவ் களை தெரிந்தால் குபேரனாகலாம். முதல்வரை தெரிந்தால் தலைமைச் செயலராகலாம். கோடிகள் புரள வழி காணலாம்.அம்மாவின் தோழியானால் சின்னம்மா ஆகலாம்.
அரசியல்வாதிகளால் அதிக அளவில் ஆதிக்கம் செய்ய இயலாத தொழில், மருத்துவ தொழில்.
இந்த தொழிலில் படிப்பு ஒன்று தான்
மூலதனம். ஒரு முறை ஐஎஎஸ் தேர்வு எழுதி பாஸ் ஆனால் காலம் பூராவும் ஐஎஎஸ் தான்.
பிஎல் படித்தால் வக்கீல்; பிஇ என்றால்
எனஜினியர்; சிஏ என்றால் ஆடிட்டர்.
ஆனால் வாழ்நாள் பூராவும் படித்துக் கொண்டே இருக்கும் தொழில்மருத்துவம் மட்டும் தான்.
வாழ்நாளில் பெரும் பகுதியை படிப்பில் செலவு செய்த மருத்துவர்கள் சேவை, நம் நாட்டில் இப்போது புகழப்படும் நிலையில் இல்லை.
மருத்துவ தொழில் செய்து கோடீஸ்வரர் ஆவது என்பது முடியாத செயல்.
மெத்த படித்த டாக்டர்களின் சேவை இங்கு ஏழை நோயாளிகளுக்கே வாரி வழங்கப்படுகிறது.
அரசியல் வாதிகள் அட்மிட் ஆவதாலேயே கார்பரேட் மருத்துவ மனைகள் இங்கு அதிகம் புகழ் பெறுகின்றன. ஏழைகள் அதிகம் வாழும் நாட்டில் நம் அரசியல் வாதிகள் மட்டும் தான் அரசு டாக்டர்கள் சேவையை நாடுவதில்லை.
நேர்மை அற்றவர்களே மூத்த அதிகாரிகளாக தேர்வு பெறுகிறார்கள்.லஞ்சம் என்பது ஊக்கத் தொகையாக பரிசீலிக்கப்படுகிறது.
இதில் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை ( no worries)
என்று நடிகர்களால் மட்டுமே பாட முடிகிறது. நடிகர்கள் இல்லாமல் நம் நாட்டில் இனி அரசியல் கட்சிகள் வெற்றி பெற இயலாது.
என் இனிய தமிழ் மக்களே...
வாழ்வில் வெற்றி பெற படிப்பை தூக்கி குப்பை கூடைகளில் எறியுங்கள்!
காலில் விழுந்து எழ பயிற்சி பெறுங்கள்!
புரட்சி தலைவிகளின் புகழ் பாட கற்றுக் கொள்ளுங்கள்!
குனிந்து நிமிற யோகா செய்யுங்கள்!
மீடியாக்களில் அதிகம் தலைகாட்ட முயற்சி செய்யுங்கள்!
கெட்ட வார்த்தைகள் அதிகம் பேசத் தெரிந்தால் மீடியா ஆங்கர் ஆக தரம் உயர இயலும்..
முயற்சி செய்யுங்கள்!
பவர் உள்ள அரசியல் தலைவர்களின் (PA)
உதவியாளர்களாக வர முயற்சி மேற்கொள்ளுங்கள்!
அட்சலீஸ்ட் அமைச்சர்களின்...
உதவியாளர்களாக அல்லது கார் டிரைவர்களாக அல்லது செக்யூரடிகளாக திகழ முயற்சி செய்யுங்கள்!
மேடம் சொன்னது போல்,
2017 NEW YEAR
எல்லா சிறப்புக்களும்
பெற்று வாழ்வில் உயர்ந்திட
நல் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment