பூரிப்பு
பொலிவு
பேராண்மை
பாரம்பரியம்
கம்பீரம்
#இனிய வேட்டிதின நல்வாழ்த்துகள்
#கடந்த 2014-ல் கோ-ஆப்டெக்சின் இயக்குனராக இருந்த சகாயம் ஐயாவின் முனைப்பில் உருவாக்கப்பட்டதுதான் உலக வேட்டிதினம். அருகிக்கொண்டே வரும் வேட்டி பயன்பாட்டை மீண்டும் தழைத்தோங்கச் செய்யவும் நெசவாளர்களின் வாழ்வு செழிக்கவும் முன்னெடுக்கப்பட்ட வேட்டிதினத்தை அதன்பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆலயா காட்டன் உட்பட்ட வேட்டி தயாரிப்பு நிறுவனங்கள் முன்னெடுக்க ஆரம்பித்தன.
ஒரு வேட்டி நம் இடுப்பை அலங்கரிக்கும்போதெல்லாம் நெசவாளர்களின் தறியொலிக்கு உற்சாகம் கூடுகிறது.மல்ட்டி நேசனல் கம்பனிகளின் ஆதிக்கத்திலும் ரிலையன்ஸ் பிர்லா போன்ற பெருமுதலாளிகளின் ஆதிக்கத்திலும் உள்ள ஜவுளி உற்பத்தியில் கடும் போட்டியைச் சமாளித்து வேட்டி நிறுவனங்கள் வீறுநடை போட்டுக்கொண்டிருக்கின்றன.
நவீன காலச்சூழ்நிலைக்கேற்ப விளம்பரங்கள் மூலமாகவும் நவீன உத்திகள் மூலமாகவும் வேட்டியை மீண்டும் மீண்டும் நினைவூட்ட பெருமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இன்றும் நம் பாரம்பரிய அடையாளமாகத் திகழும் வேட்டியை நாம் வாரத்தில் ஒருநாளாவது உடுத்த முயல்வோம்.
நன்றி
No comments:
Post a Comment