டீன்ஏஜ் பருவ மானவ மாணவியர் பிரட்சி னைகளுக்கான சிறப்பு மருத்துவ பிரிவு
நாகர்கோவில் - வெள்ளமடம் அகத்தியமுனி குழந்தைகள் மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது.
இன்று சனிக்கிழமை என்பதால் இளம் தலை முறை மாணவ மாணவியர் சற்று அதிகம் பேர் கன்சல்டிங் பிரிவில் காத்திருந்தனர்.
ஒரு ஒன்பது வயது மதிக்கத் தக்க மாணவன் ஒருவனை அழைத்து வந்தார் அவனது தாய்.
அவனது நோய் தன்மை குறித்து ஒவ்வொன் றாக சொல்ல தொடங்கினார்.
திடீர் என்று வலிப்பு நோய் வந்தவன் போல் கைகால்களை முறுக்கிக் கொள்வதாகவும் சில நேரங்களில் மயக்கமாக சாய்ந்து விடுவ தாகவும், அவ்வப்போது வயிற்று வலியால் துடிப்பதாகவும் சில நேரங்களில், நெஞ்சை பிடித்து கொண்டு வலிதாளாமல் அழுது ஒப்பாரி வைப்பதாகவும்..... அவனின் இந்த அவலங் களைக் காண சகிக்க முடியவில்லை என்றும் கூறி கண் கலங்கினார்.
கையில் சுமந்து வந்திருந்த அனைத்து மருத் துவ ரிப்போர்ட்களையும் காட்டினார்.பிரபல மூளை நரம்பியல்,,இதயம் மற்றும் குடல் நோய் சிறப்பு மருத்துவர்களின் சிறப்பு சிகிச்சை என்று அந்த மருத்துவ பட்டியல் நீண்டது.
நமது பக்கத்து மாநிலமான கேரளாவிலும் இதற்கான சிறப்பு மருத்துவம் பார்த்த மருத்துவ குறிப்புக்களையும் காட்டினார்.சமீபத்தில் ஒரு பிரபல நரம்பியல் மருத்துவமனையில் தனது மகனை ஒரு வார காலம் அட்மிட் செய்து சிகிச்சை அளித்ததாகவும் எந்த முன்னேற் றமும் ஏற்படவில்லை என்றும் அவனது நோய் என்னவென்றே தெரியவில்லை என்றும் கலங்கானார்.
ஏராளமான பணத்தை இவனுக்காக செலவு செய்து விட்டதாகவும் செய்யாத மருத்துவ சோதனைகள் எதுவும் இல்லை என்றும் இனி செய்வதற்கு எதுவும் இல்லை என்றும் எல்லா மருத்துவ ரிப்போர்ட்களும் நார்மலாகவே இருப்பதாக இவனுக்கு சிகிச்சை அளித்த
மருத்துவர்கள் கூறுவதாகவும் தெரிவித்தார்.
அவர் சொன்னது அனைத்தும் உண்மை தான்.
ரீசண்டாக எடுத்த எம்.ஆர்.ஐ, இஇஜி, இசிஜி, எகோ என்று எல்லா மருத்துவ அறிக்கைகளும் மிகவும் நார்மலாகவே இருந்தன.
எல்லா விசயங்களையும் கேட்ட பின்னர்,
தாயாரை சற்று நேரம் வெளியே காத்திருக்க சொல்லி விட்டு சிறுவனை மட்டும் எனது சேம்பருக்கு அழைத்து வரும்படி எனது நர்சிடம் கூறினேன்.
சிறுவனை பார்த்தால் நடை, உடை, பாவனை யில் குட்டி நடிகர் திலகம் போலவே காட்சி அளித்தான்.பார்த்த மாத்திரத்திலேயே அவன் ஒரு 'அட்டென்சன் சீக்கிங்' (கவனத்தை ஈர்க்க நாடகமாடும்) பர்சனாலிடி டைப் என்று
புரிந்தது.பையனை பார்த்தால் எந்த மேஜர் நோயி னாலும் பாதிக்கப் பட்டவன் போல் தோன்றவில்லை.நல்ல ஆரோக்கியமான திடகாத்திர மான சிறுவன் அவன்.
நல்ல கலகலப்பாக, சுவார்யஸ்யமாக பேசும் சோசியல் டைப் அவன். நல்ல தமிழில்
பேசினான்.
நான் நேரடியாக அவனிடம் ஒரு கேள்வி கேட்டேன்.
தம்பி! உனக்கு உண்மையிலேயே எந்த வித நோயும் இல்லை என்பது தெரியுமா இல்லை தெரியாதது போல் நடிக்கிறாயா?
நீ உன்னை அறிந்த வரை நல்ல ஆரோக்கியமாக இருப்பதாகத்தானே உணருகிறாய்.
அப்போது ஏன் மாற்றி பேசி உன் தாயாரை நோவினை செய் கிறாய்.?
என் கண்களை நன்கு உற்று பார்த்த பின் அவன் பேசினான்
ஆமாம் டாக்டர். உண்மைதான்.... நான் நல்ல ஆரோக்கியமாக இருப்பதாகவே
உணர்கிறேன்.ஆனால் சில நேரங்களில்......
ஓகே..உன் தாயாரை அழைத்தால் இந்த
உண்மையை அவரிடம் ஒப்புக் கொள்வாயா?
நிச்சயமாக!
சிரித்தபடியே நான் சொன்னதை ஆமோதித்தான்.
அவன் தாயாருக்கும் அவனுக்கும் உள்ள சில எமோசனல் பிரச்னைகளை சொன்னான்.இனி தாயாரை தொல்லை செய்வதில்லை என்று வாக்குறுதி அளித்தான். தாயார் சொல்வதை போல் கண்டதை எல்லாம் தான் வாங்கி கேட் பதில்லை என்றும் தேவையானதையே வாங்கி கேட்பதாகவும் அதையே தன் தாய் வாங்கி தருவதில்லை என்றும் தந்தை வெளிநாட்டில் வசிப்பதாகவும்...........இப்படி பல விசயங்களை தெளிவாக சொன்னான்.
ஒரு தெளிவான அறிவு செறிந்த மாணவன் ஒருவனிடம் பேசுவது போன்ற ஒரு உணர்வே அவனிடம்பேசும்போது எனக்கு ஏற்பட்டது.
நோயாளி சிறுவனாக அவன் காட்சி
அளிக்கவில்லை.
என்னை புரிந்து கொண்ட அவன்...
அவனை புரிந்து கொள்ள நான் கேட்ட கேள்விகளுக்கு நிதானமாக பதிலை தந்தான்.
சரி... வாழ்வில் யாராக வர விருப்பம்!
டாக்டரா! என்ஜினீயரா!!
இரண்டாகவும் இல்லை.
அப்படியென்றால்...... நான் கேட்டேன்
அரசியல் வாதி ஆகப் போகிறேன்
அவன் தெளிவாக சொன்னான்.
அரசியல் உனக்கு பிடிக்குமா?
ஆமாம் சார்.
அரசியலில் எந்த தலைவரை பிடிக்கும்?
ஜெயலலிதா........ டாக்டர்
கலைஞரை பிடிக்காதா?
அவருக்கு வயதாகி விட்டது
எந்த கட்சி பிடிக்கும்?
அதிமுக. ஆனால் இப்ப பிடிக்காது.
எதனால்?
சசிகலா....
அதிமுக வில் வேறு யாரை பிடிக்கும்?
பன்னீர் செல்வம் பிடிக்கும்
அது ஏன்?
அவர் முதல்வர் என்பதால் பிடிக்கும்.
அவர் தான் இப்போது என் ரோல் மாடல்.
அப்படி என்றால்.......
நான் வியப்போடு அவனை பார்த்தேன்.
டாக்டர் பன்னீர் செல்வம் போல் நானும் ஒரு நாள் தமிழ்நாட்டின் முதல்வராக வருவேன்.
அவரை பார்த்த பிறகு எனக்கும் அந்த
நம்பிக்கை வந்து விட்டது.நிச்சயம் முதல்வர் ஆவேன்.
அவன் தாயாரை அழைத்தேன்.அவரும் பையன் சொல்வதை ஆமோதித்தார்.இப்போ அடிக்கடி பன்னீர் செல்வம் போல் முதல்வர் ஆவேன் என்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறான். தாயார் சிரிக்கவே... அவனும் சிரித்தான்.
சரி என்ன மீடியம்? தமிழா! ஆங்கிலமா!
அதை ஏன் கேக்ஙறீங்க டாக்டர்.. மிகவும் கஷ்டப்பட்டு இன்டர்நேசனல் ஸ்கூல்லே
அதிகமா டொனேசன் கொடுத்து சீட் வாங்கி கொடுத்தேன்.இவன் என்னடான்னா சரியா படிக்கவும் மாட்டேன்னு சொல்றான்.இவன் அப்பா வெளிநாட்டிலே பெரிய வேலைலே இருக்கிறார்.இப்ப இவனை எப்படி படிக்க வைக்கிறதுன்னு ஒன்னும் புரியலே டாக்டர்.
எனக்கு பையனின் சேட்டைகளின் காரியம் தெளிவாக புரிந்தது.
நான் சொன்னேன் கவலைப்படாதீர்கள்.
பேசாமல் உங்கள் பையனை தமிழ் மீடியம் ஸ்கூ லில் சேர்த்து விடுங்கள்.பிடிக்காத சப்ஜக்டை தொட்டால் படிப்பு ஏறாது.
தமிழ்நாட்டு அரசிய ல் வாதிக்கு இங்க்லீஸ் தேவை இல்லை. அதுவும் தமிழக முதல்வர் ஆகத்துடிக்கும் உங்கள் மகனுக்கு ஆங்கிலம் அறவே அவசியமில்லை.பேசாமல் தமிழ் மீடியத்திற்கு மாற்றி விடுங்கள். எல்லாம் சரியாகி விடும்.
சிரித்தான் பாருங்கள் இது போல் ஒரு சிரிப்பை குழந்தைகளிடம் நான் கண்டதே இல்லை
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்
என்பது எத்துணை உண்மை.
இப்போது அரசியல் கணா காணும் மாணவர்கள் கூட அரசியல் வாதிகளாக நடிக்க கற்று வருகிறார்கள்.
politics is no more the last resort of scoundrels but the super resort of the most intelligent.
Vavar F Habibullah
No comments:
Post a Comment