ஆக்கம் :.Vavar F Habibullah
சில வேளைகளில்,எதிர்பாராத
நேரங்களில்,சில சூழல்களில்
சில கவிதைகள் எனக்குள்
தோன்றி மறைந்ததுண்டு.
ஒரு முறை, மக்காவில் நான்
இருந்த போது நான் அறிந்த
மருத்துவ டைரக்டர் மற்றும்
மருத்துவர் ஒருவர் தனது
தந்தை இறந்த செய்தி
அறிந்தும்....நண்பர்கள்
வற்புறுத்தியும் தந்தையுடன்
கொண்ட சில மனஸ்தாபம்
காரணமாக ஊர் செல்ல
மறுத்து விட்டார்.
சொன்னால் நம்ப மாட்டீர்கள்!
இரவில், கனவில் நான் அறியாத
அந்த இறந்த மனிதர் வந்து ஏதோ
சொல்ல எனக்குள் ஒரு கவிதை
பிறந்தது. அதை, அடுத்த நாள்
மானேஜர் நஜீபிடம் சொல்ல
அவர் கம்யூட்டரில் பதிந்து
பிரபல ஆரப் நாளிதழ்
ஆரப் நியூஸ் (English)பத்திரிகைக்கு
அனுப்ப, கவிதையே பிரசுரிக்காத
அந்த பத்திரிகை கவிதையின்
தரம் அறிந்து, அதை முழு பக்க
அளவில் “ஓல்ட் மேன் அண்ட்
ஹிஸ் சன்” என்ற தலைப்பில்
பிரசுரித்தது.
அந்த ஆங்கில கவிதையை
படித்த எனது நண்பர் பலர் அது
ஒரு ‘கிளாசிக் கவிதை’ என்று
பாராட்டினர்.சில மலையாள
பத்திரிகைகளும் அதை மொழி
பெயர்த்து வெளியிட்டன.
அது போலவே சென்னையில்
நான் வசித்த போது, மருத்துவம்
சார்ந்த பல கதைகளை நான்
எழுத பிரபல தமிழ் பத்திரிகைகள்
எல்லாம் அதை பிரசுரித்து
மகிழ்ந்தன.
என்ன காரணம் என்பது
தெரியவில்லை.கதை,
கவிதைகள் எழுதுவதில்
இப்போது அதிக நாட்டம் இல்லை.
எனினும், எனது இரு ஆங்கில
கவிதை தொகுப்புகள் விரைந்து
புத்தகமாக வெளிவர இருக்கிறது.
யார் கண்டது.. தாகூரின் கவிதை
போல் இதுவும் நோபல் பரிசு
பெறலாம்.
You can book your copies
earlier if you need it
Vavar F Habibullah
No comments:
Post a Comment