கவிக்கோ
சென்னையில்
எனது வீட்டு லைப்ரரியில்
சில புத்தகங்களை தேடிய போது
தம்பி அபுஹாசிமாவின் பழைய
முற்றம் இதழ் கண்ணில் பட்டது.
கவிஞர் கவிக்கோவின் படமும்
கவிஞர்கள் பற்றி அவர் எழுதிய
கட்டுரையும் அதில் இடம் பெற்று
இருந்தது.
கவிக்கோவின் ரசிகன் நான்.
ஜாதி மதம் கடந்த மத
நல்லிணக்க கவிஞர்
அவர் என்பதாலேயே என்
போன்றோருக்கு அவரை
மிகவும் பிடிக்கும்.
தன்னை கம்பனின் சிஷ்யன்
என்று பெருமை கொள்ளும்
கவிக்கோ ஒரு முறை
சொன்னார்.....
குருவை தேர்வு செய்வதற்கு
திறமை தான் அவசியமேயொழிய
மதம் அவசியமில்லை.கவிதைக்
கலையின் அந்தரங்கங்களை
கம்பனிடமிருந்து தான், நான்
அறிந்து கொண்டேன்.
கற்பனையை வளைத்து
நாண் பூட்டுவதற்கும்
சொற்களை குறி தவறாமல்
எய்வதற்கும் கம்பன் தான்
எனக்கு கற்றுக் கொடுத்தான்.
கம்பன் கழகக் கவியரங்கங்களுக்கு
நான் அழைக்கப் பட்ட போது
என் குருவுக்கு காணிக்கை
செலுத்துகிற ஒரு வாய்ப்பாகவே
அதைக் கருதினேன்.
கம்பன் கழக விழாவிலே
ஒருமுறை, அப்துல் ரகுமானை
“சூர்ப்பனகை” என்ற தலைப்பில்
கவி பாடச் சொன்னார்கள்.
ராமனை நேசித்தால்
பக்தன் என்ற பட்டம்
நானும் தான் நேசித்தேன்
எனக்கு மட்டும் தண்டனையா!
இது என்ன நியாயம்!!
சூர்ப்பனகை சார்பில் வாதிட்ட
அப்துல் ரகுமானின் வாதத்தை
கேட்ட கவியரங்கத் தலைவர்
வாகீசக் கலாநிதி கி.வா.ஜ
‘கம்பனுக்கு தோன்றாதது
ரகுமானுக்கு தோன்றுகிறது’
என்று கூறி வியந்தாராம்.
என்னை போன்ற பல ரசிகர்களை
வியக்க வைத்தவர் கவிக்கோ.
Vavar F Habibullah
No comments:
Post a Comment