dr.Vavar F Habibullah
இளமை காலத்தில்
பள்ளியில் படிக்கையிலேயே
மிருக குணங்களுக்கும் மனித
குணங்களுக்கும் ஒரு ஒற்றுமை
இருப்பதை இவன் உணர்ந்து வைத்திருந்தான்.ஆனால் வெளியில்
சொல்ல தயங்கினான்.இவன்
என்ன விஞ்ஞானி டார்வினா!
இவன் சொல்வதை எல்லாம்
பிறர் கேட்பதற்கு!
அதனாலேயே..
மிருகங்களின் குணாதிசியங்களை
புரிந்து கொள்ள பிஎஸ்சி விலங்கியல்
படித்தான்.மனிதர்களின் குணம்
நடத்தை பற்றி அறிய சைக்கலாஜி
படித்தான். இவற்றை இணைக்க மருத்துவம் படித்தான்.வளரும் குழந்தைகளே மனித குணத்தை நடத்தையை பிரதிபலிப்பதால்
குழந்தை மருத்துவம் படித்தான்.
குமரி மாவட்டத்தில், தக்கலையில்
குழந்தைகள் சிகிச்சைக்காக
என்றே, முதன் முறையாக
குழந்தைகள் மருத்துவமனை
ஒன்றை இவன் பெயரில்
நிறுவினான்.
வளர் இளம்பருவ பிரச்னைகளே
இன்றைய இளம் தலைமுறைகளை
அதிகம் பாதிப்பதால் இவன் கவனம்
முழுக்க டீன் ஏஜ் பிகேவியர்,கல்வித்
திறன்,எமோசனல் மேனேஜமெண்ட்
என்று இளைய தலைமுறைக்கு பயிற்ச்சி அளிப்பதில் நீண்டது.
சென்னையில் இவன் துவங்கிய
பிஹேவியரல் இன்ஸ்டிடுயூட்
(Institute of Behavioural Sciences)
பிரபல மருத்துவ நிபுணர்களுடன் கலந்து
உரையாடி,கருத்து பரிமாறிட உதவும்
விவாத அரங்காக திகழ்ந்தது.
அந்த நாட்களில்
இவன் சென்னையில்
நிகழ்த்திய மைண்ட் ஹீலிங் வர்க்ஸாப்
(Mind Healing Workshop)
இளம்தலைமுறையினரை மிகவும்
கவர்ந்தது.பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் மட்டுமே நடைபெறும் இந்த கருத்தரங்கில்
தேவையற்ற கூட்டத்தை தவிர்ப்பதற்
காகவே எண்ட்ரீ பீஸ் கூட கலெக்ட் செய்வதுண்டு.இருந்தும் இவன் பேச்சை
கேட்க கூட்டம் அலை மோதும்.
தாடியோடு வலம் வரும்
இவன் யார்!
மருத்துவரா
சைக்காலஜிஸ்டா
தத்துவ மேதையா
சூபி ஞானியா
அந்த நாட்களில், ஆங்கிலத்தில்
இவன் நிகழ்த்திய உரைகளை
தொகுத்தால் மட்டுமே பல நூல்கள்
உருவாகி இருக்கும்.
ஓசோ அளவுக்கு இல்லாவிட்டாலும்
ஒரு சத்குரு அளவுக்காவது ஞான
தேடலில் காலூன்ற வேண்டிய
இந்த மனிதன், வெற்றிப் பாதையை
தூக்கி எறிந்தது ஏன்!
தாடியை வெறுத்தது
ஏன்! ஏன்! ஏன்?
(தொடரும்)
dr.Vavar F Habibullah
No comments:
Post a Comment