Saturday, September 29, 2018

கலகக் கவிஞன்


அரசவைக் கவிஞன் என்பதால்
அவரை எப்படி கவிஞன் என்று
அழைக்க முடியும்!

மதுவை தொடாதவன்
போதையில் மிதக்காதவன்
கன்னியர் கைகளால்
செருப்படி வாங்காதவன்
சிறைச்சாலையில் வாழ்க்கையை
தொலைக்காதவன்
எப்படியப்பா கவிஞனாக முடியும்!
முடியாது....நிச்சயம் முடியாது.
அரசவைக் கவிஞன் என்றுமே
அநுபவக் கவிஞன் ஆக முடியாது.


டெல்லி பகதூர் ஷா ஆட்சி
காலத்தில் கவிஞர்களுக்கே
தனி இலக்கணம் கற்பித்த
கலகக் கலைஞனாக டெல்லி
வீதிகளில் வலம் வந்தவன் தான்
கவிஞர் மிர்ஸா காலிப்.

முகலாய மன்னர்களையே
வம்புக்கிழுத்தவன் இவன்.
ஒரு நாள் மசூதியில் இருந்து
சாவகாசமாக மது அருந்திக்
கொண்டிருந்தான்.இதை பார்த்த
முல்லாக்கள் கூட்டம் அவன் மீது
பாய்ந்தது.

அகில உலகும் ஆட்கொண்டவன்
இறைவன்.அவன் இல்லாத ஒரே
இடம்... பள்ளி வாசல் என்பதால்
தான் இங்கே அமர்ந்து ஒயின்
அருந்துகிறேன். அவன் இல்லாத
இடத்தில் இறைவனைத் தேடி
அலையாதீர்கள்.

ஒரு முறை காலிப், ஒரு வெள்ளைக்
கார துரையின் தொப்பி ஒன்றை
தலையில் அணிந்து இருந்ததை
கவனித்த அதிகாரி ஒருவர்
அவரை பார்த்து நீ முஸ்லிமா
இல்லை கிருஸ்தவனா என்று
கேட்க, காலிப் மிகவும் கூலாக
நான் ஆஃப் (half) முஸ்லிம் என்றார்..
அப்படியென்றால்...
ஒயின் அருந்தும் போது
நான் ஒரு கிருஸ்தவன்
பன்றி இறைச்சியை தொடாத
போது நான் ஒரு முஸ்லிம்.

மேலை நாடுகள் இன்றும்
மிர்ஸா காலிபை ஞானக்கவி
என்றே புகழ் பாடுகின்றன.
ஷெல்லியும்,லார்ட் பைரனும்
ஈட்ஸும் பெறாத புகழை
மேலை நாடுகளில் இந்த
இந்தியக் கவிஞன் பெற்றிருப்பதை
அவன் வார்த்தைகளிலேயே
சொல்வதானால்....
‘ஒரு நல்ல கவிஞன் இறந்த
பிறகு தான் வாழ்கிறான்.’

உலகம் முழுக்க பரந்து
கிடக்கும் இவனது ரசிகர்கள் கூட்டத்தை வசப்படுத்தவே இந்த ஞானப் பழத்தின் கவிச் சாற்றைப் பிழிந்து மிர்ஸா காலிப் ஒயின் என்ற பெயரில் பிரஞ்சு நிறுவனம் ஒன்று அதன் புகழ் வாய்ந்த சூஃபி ஒயின் பிராண்ட் ஆக உலகம் முழுக்க அறிமுகம் செய்து மகிழ்கிறது.

Vavar F Habibullah

No comments: