Monday, September 24, 2018

பள்ளிவாசல் கட்டுமானம் ....



உகாண்டாவின் தலைநகர் கம்பாலாவை அடுத்து சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் 'ம்பரேர்வே' புறநகரில் 'கியான்ஜா' என்கிற கிராமத்தில் உகாசேவா அமைப்பின் சார்பில் பள்ளிவாசல் கட்டுமான பணிகள் செவ்வனே நடந்தேறுகிறது ....

இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் இணைந்து வாழுகிற இச்சிறிய கிராமத்தில் குடியிருக்கும் உகாண்டா பிரஜையான ஆலீம் ஒருவர் தானமாக கொடுத்த சுமார் ஒண்ணே கால் சென்ட் நிலத்தில் தோராயமாக 45 மில்லியன் ஸில்லிங்ஸ் (12,000 டாலருக்கான இந்திய மதிப்பு 8,50,000 லட்ச ரூபாய்) மதிப்பீட்டில் மேல் தளத்தில் பெண்களுக்கும் கீழ் தளத்தில் ஆண்களுக்கும் தேவையான வசதிகளோடு கட்டப்படுகிற பள்ளிவாசல் இன்னும் ஒரு மாதத்திற்குள் முடிக்கப்பட்டு திறக்கப்படவிருக்கிறது ....

இன் ஷா அல்லாஹ் ....



மனமுவந்து நிதியளித்த உகாசேவா உறுப்பினர்களுக்கும் மற்றும் வெளி நாடுகளில் பணியாற்றுகிற சில முன்னாள் உறுப்பினர்கள் வழங்கிய கணிசமான நிதியளிப்புக்கும் உளமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன் ....

கட்டுமான பணிகளை கண்காணித்து ஆலோசனைகள் வழங்கிட ஒவ்வொரு ஞாயிறு தோறும் சிரமம் பாராது விஜயிக்கும்
உகாசேவா தலைவர் Mohideen Meeran
முன்னாள் தலைவர் Ahamed Gani
ஆகியோருக்கும் இவர்களோடு அவ்வப்போது விஜயத்தில் இணையும் உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன் ....

எம்மை ஊக்குவித்து பணிகள் துரிதமாக நடந்தேற பேரருளை தந்திடும் இறைவனுக்கே புகழனைத்தும் உரித்தாகுக ....

விஜயத்தின் போது அன்பிற்குரிய தம்பி அகமது கனி அங்கே வாழுகிற நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை குழந்தைகளுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகள் தவறாமல் வழங்குவதும் குறிப்பிடத்தக்கது ....

அப்துல் கபூர்

No comments: