கடந்த 31.8.18 வெள்ளிக்கிழமை..
கோட்டயம் மாவட்டத்தில் வெச்சூர் பள்ளியில் ஜும்ஆ தொழுகைக்காக முஸ்லிம்கள குழுமத்துவங்கினர்..
பள்ளிவாசல் இமாம் மைக் முன்பு வந்து பயான் செய்ய துவங்கியவர் சில நிமிடங்களில் தனது பேச்சை நிறுத்த அருகில் உள்ள கிறிஸ்தவ பேராலய பாதிரியார் தனது பாரம்பரிய உடையணிந்து பள்ளிவாசல் மிம்பர் அருகில் வர இமாமும் அவரை அறிமுகம் செய்து பேச அனுமதித்தார்...
பாதிரியாரின் உரையாடல்
''' எனது வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு முஸ்லிம் வழிபாட்டு தலத்தில் நுழைவது மிகவும் மகிழ்ச்சியான தருணம்... எங்கள் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேரத்தில் முஸ்லிம் இளைஞர்களின் தன்னலமற்ற சேவையை பாராட்டவே இங்கே வந்துள்ளேன்.
பேரிடர் நம்மிடையே வந்து சென்ற போது சில பாடங்களையும் நமக்கு கற்றுத்தந்துள்ளது.
மிக உயர்ந்த மதில் அமைத்து வாழ்ந்த திமிர்தனமான வாழ்க்கையை வெள்ளம் கொண்டு போனது..
நமது அகங்காரத்தை ஆணவத்தை வெள்ளம் கொண்டு போனது.
நான், எனது என்ற அகந்தையை வெள்ளம் கொண்டு போனது.
ஆனால் பேரிடர் நிறைய கற்று தந்துள்ளது.
ஜாதி மதம் இனம் பார்க்காமல் உதவி செய்ய வேண்டும் என்றும், ஒருவருக்கொருவர் ஒத்தாசையுடன் வாழ வேண்டும் என்றும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அறவே ஒழிக்க வேண்டும் என்றும் நம் மனங்களில் பதிய வைத்துள்ளது..
கடந்த காலங்களில் நம்மில் நஷ்டப்பட்ட மனித நேயம் பேரிடர் மீட்பு பணியில் திரும்ப கிடைத்தது.
ஓணமும் பெருநாளும் ஒரே இடத்தில் கொண்டாடிய மகிழ்ச்சி கூட ஒரு பேரிடர் மூலம் உருவாகியது...
இனி வரும் காலங்களில் இந்த ஐக்கியமும் பரஸ்பர உதவியையும் தொடர்வது மட்டுமே பேரிடரில் நாம் சாட்சியம் வகித்ததற்கான மனமாற்றம் ஆகும்... '''என்ற பாதிரியாரின் ஜும்ஆ உரை கேட்டு கூடியிருந்தவர்களின் கண்கள் கலங்கின..
Colachel Azheem
No comments:
Post a Comment