மனதுக்குள் வாழ்ந்து கொண்டே
மனதை மாற்ற முடியுமா!
துன்பத்தில் உழலும் மனதை
இன்பத்துக்கு மாற்ற இயலுமா!
கோபத்தின் மறு முகமே அமைதி
என்றால் சிரிப்பின் மறு பக்கம்
தானே அழுகை!
சந்தோசம் மனதில் நுழைந்தால்
துன்பம் தொலைந்து விடும் என்றால்
துன்பத்தை மனதில் தேக்கி வைப்பது
யார்!
எண்ணங்கள் நிறைவேறிய பின்னரும்
மனது கலங்குவது ஏன்!
விசித்திரமான கேள்விக் கணைகள்!
வியத்தகு பதிலுரைகள்...
சென்னையில் அவன் அப்போது
நடத்திய மைண்ட் ஹீலிங் வர்க்ஸாப்
Mind Healing Workshop
அறிவு ஜீவிகளின் மனவாசமாக
திகழ்ந்தது எனலாம்.
Five Star Performance
சென்னை பாம் குரோவ் ஹோட்டல்
துவங்கி ஹோட்டல் அபு பேலஸ்
ஹோட்டல் அசோகா,பின்னர்
முழுக்க ஹோட்டல் ரெசிடென்சி
என்று இவனது பயிலரங்கம் மிகவும் வெற்றிகரமாக தொடரந்து நடந்து வந்தது.
இரு நாட்கள் தொடர் (continuous)
பயிலரங்கமும் அடிக்கடி நிகழும்.
முழு நிகழ்ச்சிகளும் உரையாடல்
களும் ஆங்கிலத்தில் மட்டுமே
நிகழ்ந்ததால் படித்த “எலைட் குரூப்”
புரபசனல்ஸ்,காவல்துறை அதிகாரி
கள்,ஐஏஎஸ் அதிகாரிகள்,தொழில்
வல்லுநர்கள்,தொழில் அதிபர்கள்
மாணவர்கள்,மருத்துவர்கள்,
Professors,College Principals
பிரமுகர்கள் என்று தேர்ந்த அறிவு
ஜீவிகள் மட்டுமே இவன் நடத்தும்
பயிலரங்கங்களில் கலந்து பயன்
பெற்றனர் எனலாம்.இவனது
Mind Healing Workshop
வர்க்ஸாப் பற்றிய அறிவிப்புகள்
எல்லாம் அப்போது ஹிந்து
ஆங்கில நாளிதழில்
மட்டுமே பிரசுரமாகும்.
ஆங்கிலத்தில் சரளமாக
உரையாடும் திறமை கொண்ட
இவனுக்கு அப்போது தமிழில்
அவ்வளவு எளிதாக உரையாட
வராது.
என்றாலும் இவன் நடத்தி வரும்
மைண்ட் ஹீலிங் கவுன்சலிங்
பற்றி அறிந்த தமிழ் பத்திரிகைகள்
இது பற்றிய செய்திகளை “சூபிஸம்”
என்ற பெயரில் வெளியிட்டு மகிழ்ந்தன.
இவன் இப்போது நல்ல தமிழில்
பேசுவதற்கும்,எழுதுவதற்கும்
இவனது தம்பிமார்கள்
அபூ ஹாசிமா மற்றும் கவிஞர்
அதாவுல்லா போன்றோரே காரணம்
It is true also
(to be continued...)
எ.
(தொடரும்)
dr.Vavar F Habibullah
No comments:
Post a Comment