பிபிசி
ருட்டியை ஜாமியா மசூதிக்கு அழைத்துச் சென்ற ஜின்னா, அவரை இஸ்லாமியராக மதம் மாறச் செய்தார். 1918 ஏப்ரல் 19ஆம் தேதி காதலர்கள் திருமண பந்தத்தில் இணைந்தார்கள்.
மும்பையின் பிரபல தொழிலதிபரான தின்ஷா பெடிட் தனது விருப்பத்திற்குரிய காலை செய்தித்தாள் பாம்பே க்ரானிகலை காலை உணவின்போது படிப்பது வழக்கம். வழக்கம்போல் செய்தித்தாளை புரட்டியவரின் கண்களில் எட்டாவது பக்கத்தில் இருந்த செய்தியை படித்ததும் அதிர்ச்சியில் அவரது கையில் இருந்த செய்தித்தாள் கீழே விழுந்த்து.
1918 ஏப்ரல் 20ஆம் தேதியன்று வெளியான அந்த செய்தித்தாளில், முகம்மது அலி ஜின்னா, தின்ஷாவின் மகள் லேடி ருட்டியை திருமணம் செய்து கொண்ட செய்தி வெளியாகியிருந்தது.
இந்த காதல் கதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டது. தின்ஷா தனது நண்பரும், வழக்கறிஞருமான முகம்மது அலி ஜின்னாவை டார்ஜிலிங்கில் உள்ள தனது வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.
பெயருக்கு ஏற்றாற்போல் உண்மையிலேயே அழகி என்று கூறப்பட்ட தின்ஷாவின் 16 வயது மகள் ருட்டியும் அங்கு இருந்தார். அந்த சமயத்தில் ஜின்னா இந்திய அரசியலில் மிக முக்கியமான பங்காற்றிக் கொண்டிருந்தார்.
படத்தின் காப்புரிமைPAKISTAN NATIONAL ARCHIVE
அப்போது ஜின்னாவின் வயது 40 என்றாலும், 16 வயது ருட்டியும் ஜின்னாவும் காதல் வயப்பட்டார்கள். காதலுக்கு வயதோ, உருவமோ கண்ணுக்கு தெரியாது என்ற கூற்று உண்மை என்று நிரூபிக்கும் மற்றொரு சரித்திர சான்று ஜின்னா-ருட்டி காதல்.
தனது டார்ஜிலிங் பயணத்தின்போதே, ருட்டியை தனக்கு திருமணம் செய்து தருமாறு கோரிக்கை வைத்தார் ஜின்னா. ஷீலா ரெட்டி எழுதிய `மிஸ்டர் அண்ட் மிஸ்ஸ் ஜின்னா- த மேரேஜ் ஷுக் இண்டியா` (Mr and Mrs Jinnah the Marriage that shook India) என்ற புத்தகத்தில் எழுதியிருக்கும் வரிகள் இவை - 'இருவேறு மதங்களை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று இரவு உணவுக்கு பிறகு ஜின்னா தின்ஷாவிடம் கேட்டார்'.
ஜின்னாவின் வாய்ப்பு
தேச ஒற்றுமை வலுப்படும் என்று என்ற பதிலை சட்டென்று அளித்தார் தின்ஷா. இந்த அருமையான சந்தர்ப்பத்தை நழுவவிடாத ஜின்னா, ருட்டியை திருமணம் செய்து தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
ஜின்னாவின் பங்களா இந்தியாவில் ‘எதிரி சொத்து’
பிரிவினையின்போது பாகிஸ்தானுக்கு முதலில் சுதந்திரம் கொடுக்கப்பட்டதா?
ஜின்னாவின் கோரிக்கை தின்ஷாவை கோபத்தின் உச்சத்துக்கு கொண்டு சென்றது. வீட்டை விட்டு வெளியே போ என்று கத்திவிட்டார். ருட்டியை திருமணம் செய்துக் கொள்ள தின்ஷாவிடம் கடுமையாகப் போராடிய ஜின்னாவுக்கு கிடைத்தது தோல்வியே.
இரண்டு மதங்களுக்கு இடையே நட்பு என்ற ஜின்னாவின் சூத்திரம் முதல் பரிசோதனையிலேயே தோல்வியைத் தழுவியது. அதன்பிறகு தின்ஷா ஒருபோதும் ஜின்னாவிடம் பேசவேயில்லை. இனிமேல் ஜின்னாவை சந்திக்கவேக்கூடாது என்று மகளுக்கு தடை விதித்தார்.
தின்ஷா அத்துடன் விட்டுவிடவில்லை, மைனரான தனது மகள் ருட்டியை ஜின்னா சந்திக்கக்கூடாது என்று நீதிமன்ற உத்தரவையும் வாங்கி வைத்துவிட்டார். இருந்தாலும் காதல் கண்ணாமூச்சி விளையாட்டு எந்த சட்ட திட்டங்களும் கட்டுப்படாததாயிற்றே. காதலர்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் அவ்வப்போது சந்தித்துக் கொண்டனர், கடிதங்களும் எழுதிக்கொண்டனர்.
18 வயதான ருட்டி மேஜரானார்
ஷீலா ரெட்டி கூறுகிறார், "கடிதம் ஒன்றை ருட்டி படித்துக் கொண்டிருப்பதை பார்த்த தின்ஷா, ஜின்னாவின் கடிதமாகத்தான் இருக்கும் என்று யூகித்துவிட்டார். நீதிமன்ற உத்தரவு கையில் இருக்கும்போது, ஜின்னாவை மடக்க கடிதம் ஒன்றே போதுமே?
கத்திக் கொண்டே கடிதத்தை கைப்பற்ற உணவு மேசையை சுற்றி ஓடினார். ஆனால் மகள் ருட்டியோ அப்பாவின் கையில் அகப்படாமல் தப்பிவிட்டார்.
காதல் விஷயத்தில் தின்ஷா எவ்வளவு பிடிவாதமாக இருந்தாரோ, அதைவிட பிடிவாதமாக இருந்தார்கள் காதலர்களும். ருட்டிக்கு 18 வயது ஆகும்வரை பொறுமையுடன் அமைதியாக காதலில் உறுதியாக காதலர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.
ஜின்னாவின் வாழ்க்கை சரிதத்தை புத்தகமாக எழுதியுள்ள ஷரீஃப் அல் முஜாஹித் கூறுகிறார், "மிகவும் பணக்கார குடும்பத்தை சேர்ந்த ருட்டி 1918 பிப்ரவரி 20ஆம் தேதி 18 வயது பூர்த்தியடைந்ததும், ஒரு ஜோடி உடைகளை மட்டும் எடுத்துக் கொண்டு, கையில் குடையுடன் வீட்டை விட்டு வெளியேறினார்".
மேலும் படிக்க 16 வயது பெண்ணிடம் மனதை பறிகொடுத்த ஜின்னா
No comments:
Post a Comment