Friday, January 30, 2015

மீண்டும் மார்கழியில் !

மாதங்கள் ஒவ்வொன்றும்
மாற்றம் நிறைந்த தன்மை - அதில்
மார்கழி மாதமோ - மானிடர்
மகிழ்வுக்குச் செம்மை

மார்கழி என்றாலே மனநிறைவு
மலரோடு கொஞ்சிவிளையாடும் மாதமிது
பாரெங்கும் படர்ந்துகிடக்கும் பனிப்பொழிவு
பரிவோடு குளிர்காற்றின் பகல் வரவு

Saturday, January 24, 2015

உறவுகள் விரிவடையட்டும்


நேற்று தம்மாம் ஏர்போர்ட்டில் நடந்த ஒரு சுவராஸ்யமான சம்பவம்!
எனது சகோதரரின் மகள் திருமணத்திற்காக எனது சகோதரியும் அவரது இரண்டு மகள்களும் எனது இளைய சகோதரரும் தமிழகம் சென்றனர்.
அவர்களை வழி அனுப்புவதற்காக நானும் எனது உறவினர்களும் தம்மாம் ஏர்போர்ட் சென்றிருந்தோம்.போர்டிங் போடும் கியூவில் நின்று கொண்டிருந்தோம்.
எங்களுக்கு ஒரு ஆறு நபருக்கு முன்பாக ஒரு இந்து சகோதரரும் அவரது மனைவியும் பிள்ளைகளும் நின்றனர்.அவர்களும் சென்னை செல்கின்றனர்.அப்போது ஒருவர் போய் அந்த இந்து தம்பதியரிடம் ஏதோ கேட்கிறார் பதிலுக்கு அவர்கள் என்ன சொன்னார்கள் என தெரியவில்லை?
பிறகு என்னிடம் வந்தவர் பாய் எனது மனைவி ஊருக்கு செல்கிறார்.நாங்கள் அபுகைக்கில் இருக்கிறோம்.கடந்த 6மாதங்களுக்கு முன்பாக எனது மனைவியை விசிட் விசாவில் அழைத்து வந்தேன்.விசா காலம் முடிந்து விட்டதால் அவரை ஊருக்கு அனுப்புகிறேன்.

Friday, January 23, 2015

மூட நம்பிக்கை, ஒரு உண்மை கதை / ஜப்பார் அரசர்குளம்


என் மனைவிக்கு கொஞ்சநாளைக்கு முன்பு நன்றாக வளர்ந்து வந்த குழந்தை பிறக்க இரண்டு நாள் இருக்கு முன் வயிற்றில் இறந்து விட்டது இது இறைவனின் நாட்டம்  ..!

இந்த இழப்பின் மனோநிலையில் என் மனைவி அந்த குழந்தை இறந்ததில் இருந்து எங்கேயும் நல்லது கெட்டதுக்கு கூட அவர்கள் வீட்டை விட்டு எங்கேயும் போறது கிடையாது ஆனால் அவர்கள் இன்னும் மனசு சரி இல்லாமல் தான் இருந்தார்கள்  அந்த குழந்தையே நினைத்து.

சிறிது நாட்கள் கடந்தன

இந்த மாதரி இருக்கும் சமயத்தில் என் மனைவின் தோழிகள் ஒரு நாலு ,ஐந்து பேருக்கு கூட குழந்தை பிறந்து இருக்கிறது . ஆனால் எனது மனைவி  அவர்களைப் பார்க்க  போக வில்லை. அது  ஏன் என்று எனக்கு தெரியவில்லை ..

Tuesday, January 20, 2015

பெண்கல்வியின் அருமை தெரிந்த பெண் / கல்விக்கு உற்சாகம் கொடுத்த குடும்பம்

பெண்கல்வி பற்றி நிறைய பேசுபவர்கள் கூட தன் மனைவியின் படிப்பு பற்றி அக்கரை காட்டுவதில்லை. எத்தணை பேர் திருமணத்துக்கு பிறகு தன் மனைவியை படிக்க வைக்கிறார்கள்? அப்படியே இருந்தாலும் தன்னை விட அதிகமாக படிக்க வைத்திருக்கிறார்களா? படிக்க வைத்தாலும் கல்லூரிக்கு அனுப்பி படிக்க வைக்கிறார்களா? வெகு சொற்ப நபர்கள் மட்டுமே இருப்பார்கள். அதில் ஒருவர் தான் என்னவர்.

திருமணத்தின் போது சமமான கல்வித்தகுதி தான். இருவரும் பத்தாப்பு. நான் +2 தேர்வு எழுதி இருந்தேன், ரிசல்ட் வரவில்லை. திருமணம் முடித்து இருவரும் முதன்முதலில் வெளியே போனது நான்கு நாட்கள் கழித்து +2 ரிசல்ட் வாங்க தான்.

ஞானமெது

இனிப்பானதொன்றை
கசப்பாக்கினான்
இல்லாத ஒன்றுக்கு
இருப்பதின் கருவறுத்து
கல்லாத கயவன் போலே
கண்ணிருந்தும் குருடானான்

உள்ளுக்குள் வெறும்
பாலை மணல்
ஊருக்கு மட்டும்
பலமுதிர்ச்சோலையாய்
சொல்லுக்குச்சொல்
தூயோர் சொல் மறைத்து
சுயநலப்பகைக்கு
சூத்திரம் போதித்தான்

Monday, January 19, 2015

வலியென்பது யாதெனில்.../அந்த பயம் இருக்கட்டும்...


வயது முதிர்ந்தப்பின்னே..
ஆளுக்கொரு வீட்டில்
நான் தனியாகவும்;
என் இல்லாள் தனியாகவும்
பங்குப் போடப்பட்டோம்..

பிறந்த பிள்ளைகள்
மும்மரமாய் முட்டி மோதியது…
அம்மா என் கூடவே இருக்கட்டும்;
அம்மா என் கூடவே இருக்கட்டும்;

தாய் பாசமோ என நினைத்து
புலங்காயிதம் கொண்டப்போது;
மெல்லமாய் அழுதப்படி என் காதை
கடித்தாள் இல்லாள்…

வீட்டு வேலை செய்யவே
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன் என..
வறட்டுப் புன்னைகையுடன்
வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன்..
அதற்கும் நான் இலாயிக்கில்லையாயென!!
Yasar Arafat

Sunday, January 18, 2015

பிரமிப்புகளை அளிக்கும் பிரான்ஸ் - 2 - தி இந்து

பிரமிப்புகளை அளிக்கும் பிரான்ஸ் - 2 - தி இந்து



 பாரீஸில் உள்ள லூவர் அருங்காட்சியகம்
 
பாரீஸ் நகருக்குச் செல் பவர்கள் அங்குள்ள லூவர் அருங்காட்சியகத்துக்கு
நிச்சயம் செல்வார்கள். அது ஒரு கலைப் பொக்கிஷம். மோனோலிசா ஓவியம்கூட அங்குதான் இருக்கிறது. பிரபல ‘டாவின்ஸி கோட்’ புதினம் இந்த
மியூசியத்திலிருந்துதான் தொடங்குகிறது என்றால் சிலருக்குப் புரியக்கூடும்.
உலகின் பல நாடுகளிலிருந்தும் மக்கள் குவியும் இந்த அருங் காட்சியகத்துக்கு
போயிருந்த போது ஒரு கடும் ஏமாற்றம் ஏற்பட்டது. ஓர் இடத்தில்கூட ஆங்கில அறிவிப்பு கிடையாது. அந்த அளவுக்குத் தங்கள் மொழி யான பிரெஞ்சு மீது வெறித்தனமான அபிமானம் அவர்களுக்கு. தவிர ஆங்கிலேயர்கள் மீது கொண்ட வரலாற்றுப் பகை இன்னமும் கொஞ்சம் மிச்சம் இருக்கலாம் என்பது கூடுதல் காரணம்.
ஆனால் ரொம்பவும் தொடக்க காலத்தில் பிரான்ஸ் நாட்டின் மொழி பிரெஞ்சு கிடையாது.

Friday, January 16, 2015

புரிந்துணர்வில் சிறந்தவர் கணவனா? மனைவியா?

 
 
கணவன் மனைவியையும்
 மனைவி கணவனையும்
 மூச்சுக் காற்றினைப் போல
 தீர்ந்தே போகாமல்....
 தொடர்ந்து....
 இடையறாது
 மன்னித்துக்கொண்டே இருக்கும்போது
 அவர்கள்
 மீண்டும் புதிதாகப் பிறக்கிறார்கள்
 மீண்டும் புதிதாகக் காதலில் வீழ்கிறார்கள்
 மீண்டும் புதிதாகக் கல்யாணம் கட்டிக்கொள்கிறார்கள்
 ஆகையினால்
 மீண்டும் புத்தம் புதிதாக
 அந்த முதலிரவுச் சொர்க்கங்கள்
 தேன்நிலவில் நிறைந்து நிறைந்து
 உடலெங்கும் மனமெங்கும்
 உயிரெங்கும் வழிந்தோடுகின்றன.
 
அன்புடன் புகாரி 

புரிந்துணர்வில் சிறந்தவர் கணவனா மனைவியா


கணவனை அவன் தேவைகளை
மனைவியால் புரிந்துகொள்ள முடியுமா?

மனைவியை அவள் தேவைகளை
கணவனால் புரிந்துகொள்ள முடியுமா?

கொஞ்சம் முடியலாம்
முழுமையாய் முடியாது.
அதுதான் உண்மை

ஆக...
கணவனும் மனைவியும்
புரிந்துகொள்ள முடியாது
என்பதைப் புரிந்துகொண்டு
அபரிமிதான அன்பு செலுத்தினால்
அதுதான் உண்மையான
புரிந்துணர்வு

Tuesday, January 13, 2015

’பளார்’ என்று அவளை அறை / ரபீக் சுலைமான்

உலகம் முழுவதும் பெண்களுக்கெதிரான, பெண்குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நம்நாட்டிலோ சொல்லவே வேண்டாம். வன்முறை மற்றும் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவோர் பட்டியல் நாளொரு தினசரியில் வந்த வண்ணம் இருக்கிறது.

இதனை எதிர்த்தும் கண்டித்தும் போராட்டங்களும், விளம்பரங்களும் வந்து கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில், இத்தாலியின் செய்தி நிறுவனம் FANPAGE
( www.fanpage.it ), 'அவளை ஓங்கி கன்னத்தில் அறை” எனும் வித்தியாசமான கோணத்தில் ஒரு ஆய்வு நடத்தியது.

Monday, January 12, 2015

வருவதும் போவதும் ... - அபு ஹாஷிமா

 
வரும் நேரம்
நெருங்கி விட்டது !

நிமிடங்கள்
மின்னலைப்போல் மறைய
மனதுக்குள்
மின்சாரத்தின் அதிர்வு !

நெஞ்சுக் குழிக்குள்
ஊற்றெடுத்த வியர்வை
நெற்றியிலும்
மிருதுவான முகத்திலும்
பனித்துகள்களாய் பூக்க
எதிர்பார்ப்பிலேயே
அடிவயிற்றில்
அமிலம் சுரக்கிறது !

வெளியே வருவதற்கு
இத்தனை சிரமமா ?

முகத்தைப் பார்த்து விட்டால்
போதும் !
மனம் நிறைந்து விடும் !
பட்ட துன்பமெல்லாம்
தீர்ந்து விடும் !

அனுபவித்துப் பார்க்கும் போதுதான்
தெரிகிறது
அவஸ்தையிலும்
இப்படி
ஓர் இன்பம் !

000000

Sunday, January 11, 2015

உழைப்போடு ஒன்றிவாழ்....! காலம் திரும்பி வராதது./ ராஜா வாவுபிள்ளை

உழைப்போடு ஒன்றிவாழ்....!

தேவையுள்ள மனிதன்
உழைத்துக் கொண்டிருப்பான்
தேவையற்ற மனிதன்
ஜெபித்துக் கொண்டு மட்டும் இருப்பான்

உண்மையான மனிதன்
உழைப்பை உடல்வருத்தி வரும் வியர்வை நிறுத்தியதும் உலர்ந்துவிடும்
பிரார்த்தனையாய் செய்திருப்பான்
ஊர்வம்பை விலைபேசி அடுத்தவர்க்கு நஷ்ட்டத்தை பெருக்குவான்

பொய்யான மனிதன்
உழைப்பால் வரும் வியர்வை
வற்றாத ஜீவநதியாய் சார்ந்தோர் யாவரையும் செழிக்க வைக்கும்

உழைக்காது உண்டது ஜீரணிக்க
உழைப்போடு ஒன்றிவாழும் மனிதன்
சாதனைகள் படைக்க விழைகின்றான்

சோம்பேறியாய் காலம்தள்ளும் மனிதன்
தனக்குத் தானே குழிபறித்துக் கொள்கிறான்   
*********************************************************

Saturday, January 10, 2015

ஆட்டுக்குட்டிகளின் தேவதை



ஆட்டுக்குட்டியைத் தூக்கித் திரிந்த இடைச்சியின்
இடர்காலப் பாடல் எங்கும் விரிகிறது
கோடை காலங்களில் எஞ்சியிருக்கும்
அம் மலைப் பிரதேசப் பூக்களில் தேனுறிஞ்சும்
கூர் சொண்டுக் குருவி
நிலாக் கிரணங்கள் வீழும்
அவளுக்குப் பிடித்தமான வெளிகளுக்கெல்லாம்
அப் பாடலைக் காவுகின்றது

கவிதை எழுதுவதை உயிர்ச் சிலிர்ப்பாய்க் கொண்டு எழுதிய கவிதை

தமிழ்க் கவிஞர்களே கொஞ்சம் இசைகூட்டிக் கவிதை எழுதிப் பாருங்கள். நெஞ்செல்லாம் தித்திக்கும் நினைவெல்லாம் நீங்காமல் நிலைக்கும் அதன் மயக்க வரிகள் அத்தனையும். வெறுமனே மொழியாக்கச் சொற்களைச் சுத்திச்சுத்தி எதைக் கட்டப் பார்க்கிறீர்கள்? கவிதைத் தமிழின் இயற்கையான செழுமைகளைக்கொண்டு கருத்துகளைக் கட்டி அதற்குச் சொல்லிறகுகள் பூட்டி கற்பனை வானில் பறக்கவிட்டுப் பாருங்கள்

நம்ம ராஜாவுக்கு .....

நம்ம ராஜாவுக்கு கடுமையான பசி. பேர்தான் ராஜாவே தவிர கையில் பத்து பைசா இல்லை. வீட்டிலும் அடித்து விரட்டி விட்டதால், இப்ப சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று கடுமையான யோசனையில் இருந்தவர் எதிரில் இருந்த அந்த ஹோட்டலுக்கு நுழைந்தார்.
சார். கடுமையான பசி. நாலு இட்லி தந்தீங்கன்னா..

அதெல்லாம் கிடையாது. நீ இடத்தை காலி செய்ப்பா. எனக்கு வேலை கிடக்கு

சார். ஒரு வடையாவது

ஏப்பா நான் என்ன அன்னசத்திரமா நடத்துறேன். நீ இப்ப போறியா சாம்பாரை தூக்கி மூஞ்சிலே ஊத்தவா

Wednesday, January 7, 2015

ஈடிஏ குழுமத்தின் நிறுவனர் பி.எஸ். அப்துர் ரஹ்மான் சென்னையில் காலமானார் !

சென்னை: கீழக்கரையை சேர்ந்த தொழிலதிபரும்,கல்வியாளருமான பி.எஸ்.அப்துல் ரஹ்மான் அவர்கள் இன்று காலமானார்

சில மதங்களுக்கு முன் உலகத்தில் சக்திவாய்ந்த தொழில் அதிபர்களில் 500 பேர்களில் ஒருவராக பி.எஸ்.அப்துல் ரஹ்மான் அவர்கள்  இடம் பெற்று இருந்தது  குறிப்பிடத்தக்கது

பி.எஸ்.அப்துல் ரஹ்மான் அவர்களின் வாழ்க்கை குறிப்பு :-

அம்மா அம்மா நீ எங்க அம்மா/ Amma Amma Song lyrics | Velai Illa Pattadhaari

Amma Amma Song Lyrics அம்மா அம்மா நீ எங்க அம்மா
உன்ன விட்டா எனக்கு யாரு அம்மா
தேடிப் பார்த்தேனே காணோம் உன்ன
கண்ணாம்பூச்சியே வா நீ வெளியே

தாயே உயிர் பிரிந்தாயே
என்ன தனியே தவிக்க விட்டாயே
இன்று நீ பாடும் பாட்டுக்கு நான் தூங்க வேணும்
நான் பாடும் பாட்டுக்கு தாயே நீ உன் கண்கள் திறந்தாலே போதும்

Tuesday, January 6, 2015

காயிதே மில்லத்தை அறியாத எச்.ராஜா அவரை மதவெறியர் என்கிறார். அறிந்த கிருஷ்ணமூர்த்தி அய்யர் என்ன சொல்கிறார்?

காயிதே மில்லத் ஒரு மதவெறியர் - எச்.ராஜா

காயிதே மில்லத்தை எச்.ராஜா, ஒருமுறை கூட சந்தித்ததில்லை. அவரோடு பேசியதுமில்லை, பழகியதுமில்லை.
அவரது வாழ்க்கை வரலாற்றைப் பார்த்ததுமில்லை, படித்ததுமில்லை.

எச்.ராஜா எந்தச் சமூகத்தில், எந்த வகுப்பில் பிறந்தாரோ அதே வகுப்பைச் சார்ந்தவர்தான் இவர். 90 வயதைக் கடந்த இந்த முதியவரின் பெயர் கிருஷ்ணமூர்த்தி. பொறியியல் வல்லுனராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். காயிதே மில்லத்தின் அண்டை வீட்டுக்காரர். காயிதே மில்லத் வாழ்ந்த குரோம்பேட்டை தயா மன்ஸிலுக்கு எதிரில் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருப்பவர்.

Saturday, January 3, 2015

வாழ்வியல்: ஃபஜிலா ஆசாத்தின் மந்திர மொழிகள் - தாஜ்


"வாழ்க்கைங்கறது ஒரு பாம்பு கட்டம் மாதிரிதான். சின்ன சறுக்கல் பக்கத்து லேயே பெரிய ஏற்றம் இருக்கலாம். தப்பான ரூட்டும் மிகப் பெரிய சந்தர்ப் பத்தை தரலாம். வாழ்க்கையோட சுவாராஸ்யமே அதோட சஸ்பென்ஸ்தான். நம்மை மீறி விஷயங்கள் நடக்கும்போது, அதை நமக்கு சாதகமா பயன்படுத் திக்கிறதிலேதான் வெற்றி யின் சூட்சுமம் இருக்கு."- பஜிலா ஆசாத்.M.C.S.E., M.CD.B.A., C.E.H., C.C.N.A., M.B.A.,
*
'நிலவு ததும்பும் நீரோடை' என்கிற தனது கவிதைத்தொகுப்பின் வழியே வாச கர்களுக்கு அறிமுகமான சகோதரி ஃபஜிலாஆசாத், இந்த முறை, வாழ்வியல் சார்ந்த சிக்கல்களில் இருந்தும், திணறல்களில் இருந்தும் நம்மை நாம் விடு வித்துக்கொள்ள எளிய வழி முறைகளாக 'அலாவுதினின் அற்புத விளக்கு!' என்று தொடங்கி பல தலைப்புகளில் மிகவும் லாவகமான சூத்திரங்களை சொல்லி இருக்கிறார். சமீபத்தில் ஓர் தினசரி ஞாயிறு மலரில் வாரம் வாரம் அவர் எழுதியவைகள் அத்தனையும் தொகுப்பாய் கிடைக்க வாசித்தேன். வித்தியாசமாகவும், கவனிப்பிற்குறியதாகவும் தெரிந்தது.
*

Friday, January 2, 2015

கல்லறை மனங்கள்..!! -நிஷா மன்சூர்

 
பத்திகள்
புகைகின்றன

ஏழு வயதிற்கும் கீழுள்ள
சிறுவன் நிற்கிறான்,
கைகட்டி
தலைகுனிந்து
அவனுக்கு முன்னேயும்
பத்திகள் புகைகின்றன.

தளர்ந்த
உள்ளிறங்கிய சமாதிகளில்
வாசமில்லா
அழகில்லா
பூக்கள் மலர்ந்திருக்கின்றன.

உடன் கழித்த நாட்கள்
நினைவடுக்குகளில் ஊஞ்சலாட,
பிரார்த்தனைகள் பிரவாகமெடுக்கின்றன
மண்வாசிகளுக்காய்.

பத்திகள் புகைகின்றன,
கிளர்ந்து.

வெளிச்சத்தைப் புதைத்திருக்கும்
திசைகளை விழுங்கிய மூலைகளில்
எந்த மூலை தன்வசமாகும்
1முதல் மனிதனின் கருவுக்கு
தன்னுடல் எப்போது இரையாகுமென
2ஆறடியைப் பகிர்ந்துகொள்ளப் போகும்
லட்சக்கணக்கான தோழர்களை நினைத்து
வெறுமையில் திளைத்துக் கிறங்குகின்றன மனங்கள்.

மெளனகோஷம் எழுகிறது,
3“உங்களுக்கு உங்கள் மார்க்கம்
எங்களுக்கு எங்கள் மார்க்கம்”

வாசம் அழித்து
வெளியெங்கும் பரப்பி
நுரையீரல் துடிப்பதிகரித்து
மூச்சடைக்க வைத்து
பத்திகள் புகைகின்றன..!!

நீங்கள் கவிதை எழுதுகிறவரா? - கவனம்.

கவிதை எழுதுவதால்...
நீங்களும்
உங்களது சிந்தையும்
நுட்பம் கூடி
உங்களது மொழியின் பரிமாணமும்
உங்களது வாழ்வியல் பரிமாணமும்
புதிய அழகியல் கொள்ளும் என்பது
எத்தனைக்கு திண்ணமோ
அத்தனைக்கு திண்ணம்...
கவிதை ஓர் லாகிரி என்பதும்!

கவிதையின் மீது ஈடுபாடு கொண்டுவிடும் பட்சம்
அத்தனைச் சீக்கிரம்
அதனிடமிருந்து மீள்வதென்பது நடவாது!

கவிதை சிந்தனை
உங்களை ஆளத் துவங்கிவிட்டால்
வாழ்வின் பெரும்பகுதியை
அதுவே எடுத்துக் கொள்ளும்.

பொதுவில்...
கவிதை ஈடுப்பாட்டை
பணம் கொண்டவர்களின் விளையாட்டு என்பார்கள்.
வாழ்விற்கு பொருள் தேடுபவர்கள்
இதனில் ஈடுபாடு கொள்வார்களேயானால்...
வாழ்வே பொய்த்து போகும் சங்கடமுண்டு.

அந்தக் காலத்து புலவர் பெரும் மக்கள்
அரசர்களையும் ஜமீன்களையும்
புரவலர்களாக நம்பி வாழ்ந்த வாழ்வையும்
பொருளாதாரத்தில்
பாரதி கொண்ட சங்கடங்களையும்
நீங்கள் அறியவந்தாலே போதும்.

# கவிதை எழுதுபவர்கள்
இது குறித்தும்
கவனம் கொள்ள வேண்டும்.
 

Thursday, January 1, 2015

அரசர் குளத்தான்/ ரஹீம் கஸாலியின் 100 கட்டுரைகள்

ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான். அது..........

View

எஸ்.எஸ்.ஆர்.,சில நினைவுகள்........

View

ஷங்கரின் ‘ஐ’ கதை இதுதான்?

View

யாரோ கேள்வி.... நானே பதில்

View

அரசியல்வாதிகள் உங்கள் கனவில் வந்தால்.......

View

ஜெயலலிதா இதை செய்வாரா? செய்வாரா?

View

மாணவர்களும் அரசியல்வாதிகளும்....

View

வாக்களிக்க வந்து ஹீரோவான வாலிபர்......

View

ஓட்டுப்போட போறீங்களா? ஒரு நிமிஷம்........

View

கருத்துக்கணிப்புகளும், ஊடக குழப்பங்களும்.........

View

வேட்பாளர்களை மறிக்கலாமா?......கஸாலி கஃபே -(16-04-2014)

View

நான் சிகப்பு மனிதன் - குடும்பத்துடனா போறீங்க?.....

View

அய்யோ எங்களுக்கு ஓட்டு போடாதீங்க.....

View

ஆகவே உங்க பொன்னான வாக்குகளை.........

View

ஜெயலலிதாவும் கலைஞரும் இப்படி பேசினால்- ஒரு காமெடி கலாட்டா (தேர்தல் ஸ்பெஷல்)

View

கேள்வியும் நானே பதிலும் நானே...(தேர்தல் ஸ்பெஷல்)

View

எதிரும் புதிருமான விஜயகாந்த்- டாக்டர் ராமதாஸ் சந்திப்பு.....

View

தேர்தலை புறக்கணித்தார் விஜயகாந்த்....

View

பா.ம.க.,வும், தேமுதிகவும்...

View

ஜெயலலிதாவின் வேட்பாளர் பட்டியலும், விஜயகாந்தின் விளையாட்டும் -கஸாலி கஃபே- (25-02-2014)

View

இது பேய்க்கதையல்ல....... இரண்டாம் பாகம்

View

பேய்க்கதை..........

View

மு.க.அழகிரி என்றொரு ஆலமரம்.......

View

கலைஞர் ஒரு கட்சித்தலைவரா? அல்லது குடும்பத்தலைவரா- ஒரு அலசல்......

View

அழகிரியும் சசிகலாவும் -கஸாலி கஃபே (24-01-2014)

View

ஜெயலலிதாவின் பிரதமர் கனவு சாத்தியமா? -ஒரு அலசல்......

View

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...

View

என்னது...எம்.ஜி.ஆர். செத்துட்டாரா?

View

ஹிந்து(தமிழ்), தினமணி கதிருக்கு நன்றி

View

சூப்பர் ஸ்டார் நடிப்பில் எனக்கு பிடித்த சில படங்கள்.......

View

விஜயகாந்துக்கு நிம்மதி கொடுத்த பண்ரூட்டி ராமச்சந்திரன்

View

அரவிந்த் கெஜ்ரிவால்- விஜயகாந்த் சந்திப்பு........

View

விஜயகாந்தும் அரவிந்த் கெஜ்ரிவாலும்

View

இணையதள விமர்சகர்கள் என்றால் கேவலமா?

View

மனுஷங்களாடா நீங்க......

View

பாரதிராஜா என்னும் பிறவிக்கலைஞன்......

View

வில்லா.....இல்லை....நல்லா.....

View

ஜெயலலிதாவையும், விஜயதரணியையும் திட்டிய நேயர். பார்வையாளர்கள் அதிர்ச்சி....

View

ஏன் கருத்துக்கணிப்புகளை தடை செய்ய வேண்டும்?

View

ஜெயமோகனும் அதிமேதாவித்தனமும்

View

ஒரு வித்தியாசமான எம்.ஜி.ஆர்.,சிலையும், அதன் பின்னணியில் இருக்கும் அரசியலும்....

View

ஊழல் செய்தால் ஜெயில் மட்டும்தானா?

View

ஹிந்து தமிழ் நாளிதழுக்கு மீண்டும் என் நன்றி..........

View

ஒரு பிரபல இயக்குநர் சொன்னதும்....சொல்லாத உண்மைகளும்....

View

என்ன சொல்ல வருகிறது ஓநாயும் ஆட்டுக்குட்டியும்?.........

View

தி ஹிந்துவில்(தமிழ்) என் கட்டுரை.........

View

மாடர்ன் ஆர்ட் சொல்லும் நீதி என்னவென்றால்.......

View

ஜெயலலிதாவும் எஸ்.எஸ்.ஆரும்........

View

கலைஞரை மறுத்துவிட்டு நூற்றாண்டு விழாவா?

View

நவீன திருடர்கள்.

View

தி ஹிந்து தமிழ் நாளிதழ் சாதிக்குமா?

View

சபாஷ்.............இதுதாண்டா தீர்ப்பு.....

View

படத்தை பார்த்து கருத்து சொல்லுங்க பாஸ்......

View

அரசியலில் விஜயகாந்த் கடந்து வந்த பாதை

View

யார் இந்த இம்மானுவேல் சேகரன்- ஒரு பார்வை

View

இதெல்லாம் ரொம்ப ஓவரு............

View

கஸாலி கஃபே 02-09-2013

View

பதிவர் சந்திப்பை புறக்கணிக்கிறேன்.....

View

தலைவாவும் உலக சுற்றும் வாலிபனும் பின்னே தடையும்.....

View

சுதந்திர தின சிந்தனைகள்...........

View

கடந்த வருடத்தை விட கலக்கலாக.....

View

என் நட்பை பலப்படுத்த உதவிய வாலி......

View

பரிதி இளம்வழுதிக்கு சில கேள்விகள்....

View

இந்த ”அனுபவம்” உங்களுக்கு இருக்கா?

View

பரிதி அப்டேட்ஸ்

View

அண்ணா.தி.மு.க.,வில் பரிதி......எப்படி நடந்தது இந்த மாற்றம்?

View

ராஜ்யசபாவில் ஜெயிக்கப்போவது கனிமொழிதான்.......ஆனால்?

View

இது நடந்த கதையல்ல......நடக்காத கதையுமல்ல....

View

பாரதிராஜாவின் வார்த்தையும் மணிவண்ணனின் மரணமும்......

View

இனிமே வெங்காய்ம்னு திட்டுவீங்க?

View

கலைஞர்-90 சில குறிப்புகள்.....அபூர்வ படங்களுடன்.....

View

தே.மு.தி.க விஷயத்தில் ஜெயலலிதா செய்வது சரியா?

View

பட்டாப்பட்டி

View

ஆளுங்கட்சிக்கு சிம்மசொப்பனமான எதிர்கட்சி தலைவர்

View

சூது கவ்வும்.......

View

ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானது ஏன்? எப்படி?

View

ஆளுங்கட்சி-எதிர்கட்சி-மக்கள்.....

View

இன்னா செய்தாரையும் இன்னோவா கொடுத்து வாழவைக்கும் ஜெயலலிதா......(ஒரு காமெடி கலாட்டா)

View

பவர் ஸ்டார் சரி...அதென்ன பவர் கட் ஸ்டார்....(அரசியல் நறுக்ஸ்)......

View

சுப்ரமண்யசாமியும் மகளிர் அணியும்....

View

பரதேசி-பாலா கவனிக்க மறந்த விஷயங்கள்

View

ஸ்டாலின் வீட்டில் ரெய்டு......நாடகமா? கண் துடைப்பா? மிரட்டலா?- ஒரு அலசல்.....

View

தி.மு.க.,விலகலும், குடும்பக்கட்டுப்பாடும் (கஸாலி கஃபே -20/03/2013)

View

பொன்னியின் செல்வியின் பொய்கள்(கஸாலி கஃபே 13/03/2013)

View

ஃப்ரைடேன்னா ரெண்டு.....

View

போட்டோ கிராபர் (சுவாரஸ்ய மனிதர்கள்- 2)

View

என் சைக்கிளில் பீடியா...........

View

தீக்குளிப்பதற்கு பெயர் தியாகமல்ல.....முட்டாள்தனம்.

View

இப்படியும் ஒரு எம்.எல்.ஏ., -(சுவாரஸ்ய மனிதர்கள்)

View

தளபதியும், இளைஞர் எழுச்சியும்.......

View

அமைச்சரவையும் மியூசிக்கல் சேரும்.....

View

நாங்க அப்பவே அப்படி.......

View

என் சைக்கிளில் பீடியா?- என் சொந்தக்கதை

View

காவிரி தந்த கலைச்செல்வியா ஜெயலலிதா?.....

View

பசுமை புரட்சியும், ஜனதா சாப்பாடும், ஜெயலலிதா பிறந்த நாளும்.....

View

மணியம்மையும், குஷ்புவும், கேடுகெட்ட குமுதம் ரிப்போர்ட்டரும்......

View

பேனா உடைத்த காதல்

View

ராமதாசும், ஓ..பிஎஸ்.,சும் பின்னே நானும்

View

கடல்- மணிரத்னம் கொடுத்த உப்புத்தண்ணீர்.

View

திராவிடர் இயக்கம்- நோக்கம், தாக்கம், தேக்கம்.

View http:/நன்றி:/www.rahimgazzali.com/