Showing posts with label காலம். Show all posts
Showing posts with label காலம். Show all posts

Sunday, January 11, 2015

உழைப்போடு ஒன்றிவாழ்....! காலம் திரும்பி வராதது./ ராஜா வாவுபிள்ளை

உழைப்போடு ஒன்றிவாழ்....!

தேவையுள்ள மனிதன்
உழைத்துக் கொண்டிருப்பான்
தேவையற்ற மனிதன்
ஜெபித்துக் கொண்டு மட்டும் இருப்பான்

உண்மையான மனிதன்
உழைப்பை உடல்வருத்தி வரும் வியர்வை நிறுத்தியதும் உலர்ந்துவிடும்
பிரார்த்தனையாய் செய்திருப்பான்
ஊர்வம்பை விலைபேசி அடுத்தவர்க்கு நஷ்ட்டத்தை பெருக்குவான்

பொய்யான மனிதன்
உழைப்பால் வரும் வியர்வை
வற்றாத ஜீவநதியாய் சார்ந்தோர் யாவரையும் செழிக்க வைக்கும்

உழைக்காது உண்டது ஜீரணிக்க
உழைப்போடு ஒன்றிவாழும் மனிதன்
சாதனைகள் படைக்க விழைகின்றான்

சோம்பேறியாய் காலம்தள்ளும் மனிதன்
தனக்குத் தானே குழிபறித்துக் கொள்கிறான்   
*********************************************************

Monday, November 4, 2013

முக்காலமும் அறியும் திறன் ..

எக்காலத்திலும் என்னோடு இருப்பேன் என்றாய்
முக்காலமும் அறியும் திறன் பெற்றாயோ!

என்னோடு போராடும் திறன் பெற்றாய்
போர் செய்ய போர்தளம் புறப்பட்டால்
போராட்ட மனம் கொண்டு தடை செய்யும் மனமேன்
போர் களத்திலும் உடனிருந்து போர் செய்ய விருப்பமோ!

வரும் விருந்தினரை கவணித்து
காலம் கடத்தாமல் அனுப்பி வைக்கின்றாய்
காலம் கடந்து நான் வந்தால்
கடுஞ் சினம் கொண்டு அகன்றுச் செல்கின்றாய்
எக்காலமும் என்னுடன் இருப்பேன் என்று சொன்னதனை மறந்ததேன்!

Friday, December 21, 2012

ரெடிமேட் பதில்

 காலம் அவசரமானது . முன்போல் தையல்காரரிடம் துணி கொடுத்து தைப்பதில்லை. எல்லாம்  ரெடிமேட் கடைக்கு போகின்றோம். அவசர உணவு 'பாஸ்ட் புட்' பிளாஸ்டிக் பாட்டலில் அடைக்கப்பட்ட காசு கொடுத்து குடிக்க தண்ணீர். இன்னும் எவ்வளவோ!
இன்னும் சில கேள்விக்கு பதில் தேவைப்படலாம்  . அதற்கு இது உதவும்.

அப்பா கேட்டால்
ஏன்டா தேர்வுலே மார்க் குறைஞ்சிடுச்சி


வாத்தியார் சரியா பாடம் கொடுக்குலே

பள்ளிக்கூடம் சீருடை போடாமல் போனால்
ஆசிரியை கேட்டால்

நேத்து போன கரண்ட் இன்னும் வரலே சீருடையை அம்மா துவைக்கிலே
காலையிலேயும்   கரண்ட் வரலே வேன் வந்திடுச்சி  அதனாலே டாய்லேட் 
கூட பள்ளிக்கூடத்திலே போகிக்கிலாமென்று வந்துட்டேன் மேடம்